Current Affairs – 8 October 2018
தமிழகம்
1.தமிழக வனத் துறை சார்பில் கொண்டாடப்பட்ட வன உயிரின வாரத்தின் நிறைவு விழா சென்னையை அடுத்த நன்மங்கலத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா
1.இந்திய தலைமைப் புள்ளியியல் அதிகாரியாக பிரவீண் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2020 ஆகஸ்ட் இறுதி வரை இப்பதவியை வகிப்பார்.
1983-ஆம் ஆண்டு பிரிவு இந்திய புள்ளியியல் பணி அதிகாரியான பிரவீண், மத்திய புள்ளியியல் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
2.குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபர், நீதிமன்றத்துக்கு வெளியே வேறு எவரிடமாவது தன்னிச்சையாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்பட்சத்தில் அதை அடிப்படையாக வைத்து அவரை குற்றவாளியாக அறிவிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு முன்னர் அந்த வாக்குமூலங்களின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்துவது அவசியம் என்றும் கூறியுள்ளது.
வர்த்தகம்
1.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக 59 நிமிடங்களில் முதல் கட்ட அனுமதி வழங்குவதற்காக பிரத்யேக வலைதளம்(psbloansin59minutes.com) மத்திய அரசின் நிதித்துறை சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2.நாட்டின் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு கடனுதவி அளித்து வந்த ஐ.எல். & எப்.எஸ். நிறுவனம் பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், நிதி மோசடி விசாரணை அமைப்பு அந் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம்
1.அமெரிக்காவில், பாலியல் குற்றச்சாட்டுகளால் சர்ச்சையில் சிக்கிய நீதிபதி பிரெட் கவானா அந்த நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
2.சவுதி அரேபியாவில் முதல் முறையாக வங்கியின் தலைவராக பிரபல பெண் தொழில் அதிபர் லுப்னா அல் ஓலயன்(63) நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு
1.சீன ஒபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் கரோலின் வோஸ்னியாக்கியும், ஜப்பான் ஓபன் ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
2.புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரீமியர் சைக்கிளோத்தான் போட்டியில் மகளிர் பிரிவில் டெபோரா ஹெரால்டும், ஆடவர் பிரிவில் ஸ்ரீதர் சாவனூரும் தங்கம் வென்றனர்.
இன்றைய தினம்
- இந்திய விமானப் படை தினம்
- பெரு கடற்படை தினம்
- கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்(1959)
- இந்திய விமானப்படை நிறுவப்பட்டது(1932)
- ஜெர்மனி, மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது(1939)
- தென்னகம்.காம் செய்தி குழு