Current Affairs – 8 November 2018
தமிழகம்
1.வெளிநாடுகளில் உள்ளது போன்று, நூல்களை வாசிக்கும் பழக்கத்தை அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் ஏற்படுத்தும் வகையில் 2,000 புத்தகங்களுடன் இந்தியாவிலேயே முதல்முறையாக திறந்தவெளி நூலகம் திருச்சியில் அமையவுள்ளது.
2.நிகழாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
3.மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் சென்னை விமான நிலையத்தில் “காந்தி கார்னர்’ என்ற கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
4.இந்திய பத்திரிகை கவுன்சிலின் ராஜா ராம்மோகன் ராய் விருதுக்கு பத்திரிகையாளர் என்.ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா
1.தேசிய மாநாட்டுக் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் ஜுனைத் ஆஸிம் மட்டூ பாஜக ஆதரவுடன் ஸ்ரீநகர் மேயரானார்.
2.பெங்கால் ரசகுல்லா என்று புவிசார் குறியீடு பெற்றதன் ஓராண்டு நிறைவையொட்டி, வரும் 14-ஆம் தேதியை ரசகுல்லா தினமாகக் கொண்டாட மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.
வர்த்தகம்
1.இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டில் ரூ.576.46 கோடியாக இருந்ததாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.
உலகம்
1.இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவின் கட்சியைச் சேர்ந்த துணை அமைச்சர் ஒருவர் ராஜிநாமா செய்துள்ளார்.
இதனால், சிறீசேனா-ராஜபக்ச கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2.அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில், அதிபர் டிரம்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி மக்களவையில் (மக்கள் பிரதிநிதிகள் சபை) பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.
எனினும், மேலவையான செனட் சபையை ஆளும் குடியரசுக் கட்சி தக்கவைத்துக்கொண்டது.
3.சீனாவின் ட்சே சியாங் மாநலத்தின் வூஜென் நகரில் 5வது சர்வதேச இணைய மாநாடு தொடங்கியது.
விளையாட்டு
1.சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி நாக் அவுட் சுற்றுக்கு இந்திய நட்சத்திரம் கே.ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ளார்.
2.உலக மகளிர் செஸ் சாம்பியன் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கொனேரு ஹம்பி, ஹரிகா ஆகியோர் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
இன்றைய தினம்
- உலக நகர திட்டமிடல் தினம்
- பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்த தினம்(1927)
- வில்ஹெம் ராண்ட்ஜன், எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்(1895)
- மொன்டானா, அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைக்கப்பட்டது(1889)
- பிரிட்டன் இந்திய பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது(1965)
- தென்னகம்.காம் செய்தி குழு