தமிழகம்

1. நடப்பாண்டில் இதுவரை 800 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2.நீலகிரி மாவட்டம் அமைக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆவதையொட்டி, அதனை சிறப்பிக்கும் வகையில் உதகையில் உள்ள அரசினர் ரோஜா பூங்காவில் மேலும் 200 ரகங்களில் ரோஜா செடிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


இந்தியா

1.வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை, வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விவகாரத்தில், ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி 21 எதிர்க்கட்சிகள் இணைந்து தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2.உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த இரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பெயர்களை கொலீஜியத்துக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது.


வர்த்தகம்

1.குறைந்த மழைப்பொழிவு காரணமாக 2018-19-ஆம் பருவத்தில் நாட்டின் பருத்தி உற்பத்தி 315 லட்சம் பேல்களாக குறையும் என இந்திய பருத்தி கழகம் (சிஏஐ) தெரிவித்துள்ளது.

2.வேளாண் துறையில் எரிசக்தி ஆற்றலை திறம்பட கையாளுவதற்கு உதவுவதற்காக டாஃபே நிறுவனம்-பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி கழகம் (பிசிஆர்ஏ) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.

3.திருப்பூர், பழங்கரையில் உள்ள, ஐ.கே.எப்., வளாகத்தில், சர்வதேச பின்னலாடை கண்காட்சி, வரும், 15ல் துவங்கி, 17ம் தேதி வரை நடக்கிறது.கடந்த நிதியாண்டில், 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பின்னலாடைகள், திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகியுள்ளன.


உலகம்

1.மியான்மரில் ரோஹிங்கயா பிரச்னை குறித்து செய்தி வெளியிட்டமைக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரு செய்தியாளர்கள், 511 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
சர்வதேச மனித உரிமைகள் மற்றும் எழுத்துரிமை அமைப்பினரின் கடும் போராட்டத்துக்குப் பிறகு, மியான்மர் அதிபர் பொதுமன்னிப்பு அளித்ததன் பேரில் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் போன்ற நாடுகள் இடம் பெற வேண்டியது அவசியம் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.


விளையாட்டு

1.மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றுக்கு நடப்பு சாம்பியன் குவிட்டோவா, சிமோனா ஹலேப் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.


ன்றைய தினம்

  • உலக செஞ்சிலுவை தினம்
  • தென்கொரியா பெற்றோர் தினம்
  • செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டியூனாண்ட் பிறந்த தினம்(1828)
  • ஜான் பெம்பர்ட்டன், கொக்ககோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தை கண்டுபிடித்தார்(1886)

– தென்னகம்.காம் செய்தி குழு