தமிழகம்

1.புதுச்சேரியில் இருந்து சென்னை, சேலத்துக்கு ஜூலை 15 -ஆம் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

2.சென்னை மெரீனா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.50 கோடியில் நினைவு மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


இந்தியா

1.அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களிடம் அபராதம் வசூலிக்க, சுங்கச் சாவடிகளுக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு நிராகரித்த நிலையில், அதனை எதிர்த்து எதிர்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன.


வர்த்தகம்

1.இந்தியாவின் உருக்குப் பொருள்கள் ஏற்றுமதி சென்ற நிதி ஆண்டில் 16.7 சதவீதம் அதிகரித்தது.

2.இந்தியாவின் இருசக்கர வாகனச் சந்தையில் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனையை, அதன் முன்னாள் கூட்டாளியான ஜப்பானின் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நெருங்கியுள்ளது. இவ்விரு நிறுவனங்களுக்கிடையிலான ஏப்ரல் மாத விற்பனை வித்தியாசம் வெறும் 12,134 வாகனங்கள் மட்டுமே.


உலகம்

1.ரஷ்ய அதிபராக விளாதிமீர் புதின் 4-ஆவது முறையாக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.இதன் மூலம், 18 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாட்டை ஆண்டு வரும் புதின், மேலும் 6 ஆண்டுகளுக்கு அதிபராக நீடிப்பார்.

2.லெபனானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லா கட்சி முன்னிலையில் உள்ளது.


விளையாட்டு

1.சித்தூரில் நடைபெற்ற 32-வது பெடரேஷன் கோப்பை கூடைப்பந்து சாம்பியன் போட்டியில் ஆடவர் பிரிவில் சென்னை ஐஓபி அணியும், மகளிர் பிரிவில் கேரள மகளிர் அணியும் பட்டம் வென்றன.

2.கிரிக்கெட் போல, கால்பந்திலும், ‘மினி’ உலக கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்த, ‘பிபா’ திட்டமிட்டுள்ளது.


ன்றைய தினம்

  • உலக செஞ்சிலுவை தினம்
  • தென்கொரியா பெற்றோர் தினம்
  • செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டியூனாண்ட் பிறந்த தினம்(1828)
  • ஜான் பெம்பர்ட்டன், கொக்ககோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தை கண்டுபிடித்தார்(1886)

–தென்னகம்.காம் செய்தி குழு