Current Affairs – 8 March 2019
தமிழகம்
1.தமிழகத்தில் கோவை உள்பட 4 இடங்களில் புதிதாக கேந்திர வித்யாலய பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
2.ஆவடி – பட்டாபிராம் அருகே 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.230 கோடியில் டைடல் பார்க் அமைப்பதற்கான நுழைவு அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இந்தியா
1.லோக்பால் தேர்வு குழுக் கூட்டம் நடைபெறவிருக்கும் நாள் குறித்து, இன்னும் 10 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
2.முதல் முறையாக 20 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.
3.தனியார் வர்த்தக நிறுவனங்கள் கட்டணம் செலுத்தி ஆதார் சேவையை பயன்படுத்தலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) கூறியுள்ளது. இது விரைவில் அமலுக்கு வருகிறது.
வர்த்தகம்
1.சாதகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலவரங்களால் தொடர்ந்து நான்காவது நாளாக பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம் காணப்பட்டது.
அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவான ஏற்றத்தைச் சந்தித்தது.
உலகம்
1.இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 2018-ஆம் ஆண்டில் 160 கோடி டாலர் குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
2.உலகப் புகழ் பெற்ற பார்பி பொம்மை அறிமுகப்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகிறது.
விளையாட்டு
1.ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சாய்னா நெக்வால் முன்னேறியுள்ளார்..
இன்றைய தினம்
- உலக சிறுநீரக தினம்
- சர்வதேச மகளிர் தினம்
- அல்பேனியா அன்னையர் தினம்
- ரோமானியா அன்னையர் தினம்
- இந்திய விடுதலை போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் பிறந்த தினம்(1908)
- நியூயார்க் பங்குச்சந்தை நிறுவனமயமாக்கப்பட்டது(1817)
– தென்னகம்.காம் செய்தி குழு