Current Affairs – 8 June 2019
தமிழகம்
1.தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 7) தொடங்கும் ஆசிரியர் தகுதித்தோ்வில் இடை நிலை ஆசிரியர் பணிக்கான முதல் தாளை ஒரு லட்சத்து 83,341 தேர்வா்கள் எழுதவுள்ளனர்.
2.போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் இருந்து அபராதத்தை வசூலிக்க இ-செலான் எனப்படும் நவீன இயந்திரத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்தியா
1.ஆந்திர மாநிலத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 துணை முதல்வர்களை நியமிக்க முதல்வர் ஜெகன்மோகன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2.தெலங்கானாவில் மொத்தம் உள்ள 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12 பேர் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியில் இணைவதற்காக பேரவைத் தலைவரைச் சந்தித்து கடிதம் அளித்தனர்.
வர்த்தகம்
1.இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., மத்திய மாநில பட்ஜெட்டை மதிப்பிடும் வகையில், புதிய குறியீடை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
உலகம்
1.பிரிட்டனின் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் தொடர்பான பிரச்னையில், தெரசா மே, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
2.அமெரிக்க பார்லிமென்ட்டின் கீழ்சபையான பிரதிநிதிகள சபை தலைவராக இந்திய வம்சாவளி பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விளையாட்டு
1.பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் மழையால் ரத்தானது
2.பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ஸ்பெயினின் நடால், சுவிட்சர்லாந்தின் பெடரரை நேர் செட்களில் வீழ்த்தினார்.
இன்றைய தினம்
- உலக கடல் நாள்
- படிவ நிரலாக்க மொழி பி.எம்.பி வெளியிடப்பட்டது(1995)
- உலகக் கடல் தினம் முதன் முதலில் கொண்டாடப்பட்டது(1992)
- அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது(2007)
– தென்னகம்.காம் செய்தி குழு