தமிழகம்

1.தமிழகத்தில் 20 சதவீதம் பேருக்கு புகையிலைப் பழக்கம் இருப்பதாக, உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

2.செங்கோட்டை -புனலூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 49.3 கி.மீ. தூர அகல ரயில் பாதையை மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோகைன் சனிக்கிழமை திறந்து வைக்கிறார்.

3.மதுரையில் இருந்து ஹைதராபாத்துக்கு பயணிகள் விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம்  தொடங்கியது .


இந்தியா

1.நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களில் இணையச் சேவை வழங்கும் மத்திய அரசின் ரெயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து இலவச வைஃபை’ வசதி அளிக்கப்பட்டு வருவதாக இணையதள தேடுபொறி நிறுவனமான கூகுள் தெரிவித்துள்ளது.

2.ரயில்களில் கூடுதலாக சுமைகளைக் கொண்டு செல்லும் பயணிகளுக்கு 6 மடங்கு அபராதம் விதிக்கும் முடிவை ரயில்வே துறை நிறுத்தி வைத்துள்ளது.


வர்த்தகம்

1.இந்தியாவில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 4,000 கோடி டாலராக குறைந்து போனது என ஐ.நா. வெளியிட்ட புதிய வர்த்தக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரே நாளில் 4,914 கறிவேப்பிலை கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி இந்திய விவசாயி சுதேஷ் குருவாயூர்  உலக சாதனை படைத்துள்ளார்.


விளையாட்டு

1.பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனை சிமோனா ஹலேப் யுஎஸ் ஓபன் சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் மோதுகின்றனர்.

2.இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மகளிர் பிரிவில் ஹர்மன்பிரீத் கெளர், ஸ்மிருதி மந்தானா ஆகியோர் விருது பெறுகின்றனர்.


ன்றைய தினம்

  • உலக கடல் நாள்
  • படிவ நிரலாக்க மொழி பி.எம்.பி வெளியிடப்பட்டது(1995)
  • உலகக் கடல் தினம் முதன் முதலில் கொண்டாடப்பட்டது(1992)
  • அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது(2007)

–தென்னகம்.காம் செய்தி குழு