தமிழகம்

1.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வின்போது கிடைத்த 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய இரட்டைச்சுவர்களின் தொடர்ச்சியை கண்டறிய ஜி.பி.ஆர். (புவி ஊடுருவி ரேடார்) எனும் நவீன கருவி மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2.சிகாகோவில் நடைபெறும் பெட்னா மாநாட்டில் தமிழியக்கம் பதிப்பித்த 46 ஆயிரம் தனித்தமிழ் பெயர்கள் கொண்ட “சூட்டி மகிழ்வோம் தமிழ்ப் பெயர்கள்’ எனும் நூலை தமிழக தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் சனிக்கிழமை வெளியிட்டார்.


இந்தியா

1.திருடப்பட்ட அல்லது தொலைந்துபோன செல்லிடப்பேசிகளை கண்காணித்து அவற்றின் செயல்பாட்டை முடக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை தொலைத்தொடர்புத் துறை அடுத்த மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது.

2.நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) இல்லாமல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பிக்காமலேயே அந்த எண்ணை ஒதுக்கீடு செய்ய வருமான வரித் துறை முடிவு செய்துள்ளது.


வர்த்தகம்

1.நடப்பு நிதியாண்டில், ரிசர்வ் வங்கியிடமிருந்து, 90 ஆயிரம் கோடி ரூபாய், ‘டிவிடெண்டு’ தொகையை மத்திய அரசு எதிர்பார்ப்பதாக, மத்திய நிதித் துறை செயலர், சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.


உலகம்

1.கிரீஸ் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்றது.
ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவது குறித்து அந்த நாட்டில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்புக்குப் பிறகு நடைபெறும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.

2.ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.


விளையாட்டு

1.8 முறை சாம்பியன் பட்டம் வென்ற பெடரர் 7-5, 6-2, 7-6 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் லூகாஸ் பெளலியை வீழ்த்தி நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்றார். இது கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் அவர் பெற்ற 350-ஆவது வெற்றியாகும். மேலும் 17-ஆவது முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

2.உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது.


ன்றைய தினம்

  • வாஸ்கோட காமா, இந்தியாவிற்கான முதல் நேரடிப் பயணத்தை துவக்கினார்(1497)
  • ம.பொ.சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன(2006)
  • வால் ஸ்ட்ரீட் ஜர்னல், முதலாவது இதழ் வெளியானது(1889)
  • இந்தியாவின் 11வது பிரதமர் சந்திரசேகர் இறந்த தினம்(2007)

– தென்னகம்.காம் செய்தி குழு