தமிழகம்

1.ஜப்பான் சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சென்னை திரும்புகிறார்.ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு பன்வாரிலால் புரோஹித் முதல் முறையாக வெளிநாட்டுப் பயணமாக ஜப்பான் சென்றது குறிப்பிடத்தக்கது.


இந்தியா

1.மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் பொது நுழைவுத் தேர்வு, பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஜேஇஇ முதன்மை தேர்வு ஆகியவை இனி ஆண்டுக்கு இருமுறை, கணினி வழியாக நடத்தப்படும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
2.பெங்களூரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு இன்போசிஸ் அறக்கட்டளை ரூ. 200 கோடியை நன்கொடையாக வழங்கவுள்ளது.


உலகம்

1.வெளிநாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள், விஞ்ஞானிகளுக்கு எளிதில் விசா அளிக்கும் புதிய திட்டத்தை பிரிட்டன் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
2.கடவுள் இருப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. கடவுளைப் பார்க்க முடியும், அவருடன் பேச முடியும் என்பதை ஒரு கைப்படம் (செல்ஃபி) அல்லது, புகைப்படம் மூலமாக யாராவது நிரூபித்தால், நான் உடனடியாக எனது பதவியிலிருந்து விலகத் தயார் என பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே தெரிவித்துள்ளார்.


வர்த்தகம்

1.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன (ஆர்ஐஎல்) தலைவராக முகேஷ் அம்பானி (61) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக் காலம் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


 

–தென்னகம்.காம் செய்தி குழு