Current Affairs – 8 July 2018
தமிழகம்
1.அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் படுக்கை வசதியுள்ள புதிய பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய செயலி மற்றும் தட்கால் டிக்கெட் முறையை விரைவில் அறிமுகப்படுத்த போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
2.பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை கடந்தாண்டு அக்டோபர் முதல் ஊதிய உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா
1.மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பல்வேறு கட்சிகளுடன் மத்திய சட்ட ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது. இன்றும் இந்தக் கூட் டம் நடை பெறுகிறது.
வர்த்தகம்
1.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், முகேஷ் அம்பானியின்பதவிக் காலம், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2.கோயம்புத்துார் மாவட்ட சிறு தொழில் கூட்டமைப்பு – ‘கொடீசியா’வின் தலைவராக, ஆர். ராமமூர்த்தி, செயலராக, பி.எஸ்.தேவராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
3.ஜி.எஸ்.டி., அறிமுகத்துக்குப்பின், தமிழகம், 50 ஆயிரத்து, 972 கோடி ரூபாய் வரி வருவாய் ஈட்டியுள்ளது,’’ என, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான, ஜி.எஸ்.டி., மற்றும் நேரடி வரி விதிப்பு முதன்மை ஆணையர், சி.பி.ராவ் தெரிவித்தார்.
உலகம்
1.பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
விளையாட்டு
1.இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு, புதிய, ‘விசா’ முறையை, பிரிட்டன் அரசு அறிமுகப் படுத்தி உள்ளது.
இன்றைய தினம்
- வாஸ்கோ ட காமா, இந்தியாவிற்கான முதல் நேரடிப் பயணத்தை துவக்கினார்(1497)
- ம.பொ.சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன(2006)
- வால் ஸ்ட்ரீட் ஜர்னல், முதலாவது இதழ் வெளியானது(1889)
- இந்தியாவின் 11வது பிரதமர் சந்திரசேகர் இறந்த தினம்(2007)
–தென்னகம்.காம் செய்தி குழு