Current Affairs – 8 January 2019
தமிழகம்
1.மதுரையில் அமையவுள்ள அகில இந்திய அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் கூடிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சர் அஷ்வனி குமார் சௌபே தெரிவித்தார்.
2.தமிழகஅமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தமது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பு கே.ஏ.செங்கோட்டையனிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
3.வரும் கல்வியாண்டு முதல் நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது.
4.தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்து வருகின்ற மே மாதம் இறுதி வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்தியா
1.பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு, கல்வி-வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2.குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, மக்களவையில் அந்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
3.சிபிஐ இயக்குநருக்கான பணிகளில் இருந்து தன்னை விடுவித்தும், விடுப்பில் அனுப்பியும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக அலோக் குமார் வர்மா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்குகிறது.
வர்த்தகம்
1.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2.நாட்டின் நேரடி வரி வசூல் கடந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 14.1 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம்
1.வங்கதேசத்தின் பிரதமராக அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனா திங்கள்கிழமை பதவியேற்றார்.
அவருடன், 46 பேர் கொண்ட அமைச்சரவையும் பொறுப்பேற்றுக் கொண்டது.
விளையாட்டு
1.71 ஆண்டுக்கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றி கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
2.சென்னையில் திங்கள்கிழமை தொடங்கிய அரைஸ் ஸ்டீல் 9-ஆவது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் ட்டத்தில் கடைசி நேர கோலால் மணிப்பூர் அணி 3-3 என எஸ்எஸ்பி அணியை டிரா செய்தது.
3.ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக அல் ஐனில் திங்கள்கிழமை கிர்கிஸ்தானுடன் நடைபெற்ற ஆட்டத்தில் சீனா வென்றது.
இன்றைய தினம்
- மொனாக்கோ விடுதலை பெற்றது(1297)
- ஆல்பிரட் வெயில், புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்தினார்(1838)
- அலாஸ்காவில் ராணுவ ஆட்சி வந்தது(1900)
- பிடெல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி முடிவுக்கு வந்தது(1959)
– தென்னகம்.காம் செய்தி குழு