தமிழகம்

1.பொதுத் தேர்வு செய்முறைத் தேர்வுகளில் விதிமுறைகள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.


இந்தியா

1.தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ், கடந்த நான்கரை ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 9. 16 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், சுமார் 5. 5 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட என்ஜின் இல்லாத முதல் ரயிலான வந்தே பாரத்’ விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 15-ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். மேலும், இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட சில ரயில் திட்டங்களையும் விரைவில் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.


வர்த்தகம்

1.சுமார் 18 மாத இடைவெளிக்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதன் மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களின் நிரந்தர வைப்புத் தொகைகளுக்கு வங்கிகள் அளிக்கும் வட்டியும் குறைய வாய்ப்பு உள்ளது.ரிசர்வ் வங்கியிடம் இருந்து பிற வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

2.பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய வங்கிகளின் கடன் வழங்கல் நடவடிக்கைகளுக்கு நேர்மறை தரக் குறியீட்டை மூடிஸ் வழங்கியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளவேண்டிய கட்டுப்பாட்டு பட்டியலிலிருந்து (பிசிஏ) இந்த வங்கிகள் வெளியேறியதையடுத்து மூடிஸ் நிறுவனம் இந்த தரக்குறியீட்டை வழங்கியுள்ளது.


உலகம்

1.உலகி வங்கி தலைவர் பதவிக்கு டேவிட் மல்பாஸ் பெயரை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.

2.பூமியின் சராசரி வெப்பம் கடந்த 2018-ஆம் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக அதிகபட்ச அளவு இருந்ததாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல அமைப்பு (என்ஓஏஏ) தெரிவித்துள்ளன.


விளையாட்டு

1.ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டத்தில் செளராஷ்டிரா அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்க வைத்தது விதர்பா.


ன்றைய தினம்

  • புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது(1849)
  • நாஸ்டாக் பங்கச் சந்தை குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது(1971)
  • இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டன(2005)
  • அப்பர் வோல்ட்டாவில் ராணுவப் புரட்சி இடம்பெற்றது(1974)
  • மரண தண்டனைகளுக்கு நச்சு வாயுவை பயன்படுத்தும் முறையை முதல் முறையாக அமெரிக்கா, நெவாடாவில் அறிமுகப்படுத்தியது(1924)

– தென்னகம்.காம் செய்தி குழு