தமிழகம்

1.தொழில் நிறுவனம்-கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முதல் மாநாட்டை சென்னை ஐஐடி வருகிற 10 ஆம் தேதி மும்பையில் நடத்த உள்ளது.


இந்தியா

1. மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக, ஹைதராபாத்தில் உள்ள இந்திய வர்த்தக் கல்வி நிலைய பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் இருப்பார்.

2. ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 74 சதவீத வாக்குகளும், தெலங்கானாவில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 67 சதவீத வாக்குகளும் பதிவாகின.

3.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 11-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


வர்த்தகம்

1.ஐபிஎம் நிறுவனத்தின் பாதுகாப்பு, சந்தைப்படுத்துதல், ஒருங்கிணைந்த தீர்வுகள் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட  மென்பொருள் தயாரிப்புகளை கையகப்படுத்தவுள்ளதாக இந்தியாவைச் சேர்ந்த ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ்  தெரிவித்தது.

2.பரஸ்பர நிதியங்கள் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு நவம்பர் இறுதி நிலவரப்படி ரூ.24.03 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

3.இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.9 சதவீதமாக அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி  தெரிவித்தது.


உலகம்

1.அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் பதவிக்கு, தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹெதர் நாவெர்ட் பரிந்துரைக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

2.ஐ.நா.வில் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.


விளையாட்டு

1.தமிழ்நாடு வாலிபால் சங்கத்தை நிர்வகிக்க புதிய இடைக்கால குழு (அட் ஹாக் கமிட்டி) நியமிக்கப்பட்டுள்ளது.

2.11 ஒலிம்பிக் மற்றும் 3 பாராலிம்பிக் வீரர்களை புதிய பயிற்சியாளர்களாக நியமித்துள்ளது இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (சாய்).


ன்றைய தினம்

  • இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது1864)
  • ருமேனியா அரசியலமைப்பு தினம்
  • பனாமா அன்னையர் தினம்
  • தென்னகம்.காம் செய்தி குழு