இந்தியா

1.கும்பமேளாவை இந்தியாவின் கலாசார பாரம்பரியம் என்று ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.
2.அரசு நல திட்டங்களுக்கு ஆதார் இணைக்க காலக்கெடு மார்ச் 31-ந் தேதி வரை நீடிக்க முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும் செல்போன் சேவைகளை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் இணைக்க கடைசி தேதி கோர்ட்டு உத்தரவு வரும் வரை பிப்ரவரி 6-ந்தேதி என்றும் தெரிவித்துள்ளது.
3.மது குடிப்போருக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 21-ல் இருந்து 23-ஆக அதிகரிக்க கேரளா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.


உலகம்

1.புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் இந்திய ரூபாய் மதிப்பில் 68 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
2.போலாந்து நாட்டின் பிரதமராக இருந்துவந்த பீட்டா சைட்லோ ராஜினாமா செய்துள்ளதையடுத்து புதிய பிரதமராக மேத்யூஸ் மொராவெய்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3.ஓர் பாலினத்தவர் திருமண சட்ட மசோதாவுக்கு ஆஸ்திரேலியா பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கியுள்ளனர்.ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள நாடுகளில் ஆஸ்திரேலியா 26-வது நாடாக அங்கம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
4.செல்பி எடுத்த நருடோ குரங்கிற்கு இந்த ஆண்டிற்கான ‘சிறந்த நபர்’ என்ற விருதை விலங்குகள் உரிமை குழுமம் வழங்கியுள்ளது.


இன்றைய தினம்

1.2004 – தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம் உருவானது.
2.இன்று பனாமா நாட்டில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு