தமிழகம்

1.தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளார்.

2.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் அகழாய்வில் வெளிநாட்டு வகையைச் சேர்ந்த அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


இந்தியா

1.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370-ஆவது சட்டப்பிரிவை நீக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை அடுத்து, இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2.உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையை 30-இல் இருந்து 33 ஆக அதிகரிக்கக் கோரும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

3.புதிய மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூன் மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் ஜூலை 26-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூட்டத்தொடரை ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவில் 35 அமர்வுகளில் 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.


வர்த்தகம்

1.கடந்த 6 மாதங்களில் ரெப்போ எனப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து 4-வது முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டியை 0.35% குறைத்தது ரிசர்வ் வங்கி. இதனால் 5.75 சதவீதத்தில் இருந்த ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

2.வரும் டிசம்பர் மாதம் முதல் ‘நெஃப்ட்'(NEFT) முறையின் மூலமாக 24 மணி நேரமும் பணப்பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.


உலகம்

1.ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியத் தூதர் அஜய் பிசாரியாவை பாகிஸ்தான் வெளியேற்றியது.


விளையாட்டு

1. ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், இரண்டாவது சுற்றில் அமெரிக்க வீராங்கனை சோஃபியா கெனினிடம் 7-6, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனையும், தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவருமான ஆஷ்லே பார்டி தோல்வி அடைந்து வெளியேறினார்.

2.உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனைகள் தொடர்பாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள டாப் 15 பட்டியலில் ஒரே இந்தியராக பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து இடம்பிடித்துள்ளார்.


ன்றைய தினம்

  • ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது(1967)
  • ஐநா சாசனம் அமெரிக்காவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது(1945)
  • பாகிஸ்தான் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது(1947)
  • வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது(1942)

– தென்னகம்.காம் செய்தி குழு