தமிழகம்

1.திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார்.திருவாரூர் மாவட்டம் திருக்குவளை என்னும் சிறிய கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி முத்துவேலர் – அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாகப் பிறந்தவர் கருணாநிதி. இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. தன் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்த கருணாநிதி, தன் பெயருக்கு முன்னால் ‘டி.எம்’ (திருவாரூர் முத்துவேலர் கருணாநிதி) என்ற இனிஷியலை, சி.என்.அண்ணாதுரை (காஞ்சிபுரம் நடராசன் அண்ணாதுரை) வழியைப் பின் பற்றி, நீண்டகாலமாகப் போட்டுக்கொண்டிருந்தார். பின்னர், மு.கருணாநிதி என்று மாற்றிக்கொண்டார்.

2.சென்னையில் வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், பூம்புகார் மீட்டெடுப்பு, பெரியார் சமத்துவபுரம், குமரியில் திருவள்ளுவருக்கு 133 அடியில் கற்சிலை, கோவையில் உலக செம்மொழி மாநாடு, உணவுப் பாதுகாப்புகாக இந்திய உணவுக் கழகத்தைப்போல, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் போன்ற பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

3.நாட்டிலேயே முன்னோடித் திட்டமாக மகளிர் திருமண உதவித் திட்டங்களைக் கொண்டு வந்தார். தமிழ் அறிஞர்கள் உதவியோடு, தமிழ் ஆண்டு வரிசைக்கு, ‘திருவள்ளுவர் ஆண்டு’ என்ற முறையைக் கொண்டு வந்தார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்து, பெருமை சேர்த்தவரும் கருணாநிதிதான்.

4.முதன்முதலாகத் தன்னுடைய 33 வது வயதில் தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார் கருணாநிதி. 45 வயதில் முதல் அமைச்சர் ஆனார். 13 முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.6 சரித்திர நாவல்களையும் 10 சமூக நாவல்களையும் 21 நாடகங்களையும் கருணாநிதி எழுதியுள்ளார்.

5.பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ‘இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழகத்தில் பெண்களுக்கும் குடும்பச் சொத்தில் சமஉரிமை உண்டு’ என்ற சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார்.


இந்தியா

1.மக்களவையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய நிதி தீர்மானம் மற்றும் வைப்புத் தொகை காப்பீடு மசோதாவை (எஃப்.ஆர்.டி.ஐ.) மத்திய அரசு வாபஸ் பெற்றது.


வர்த்தகம்

1.இந்­தி­யா­வில், மாநில அள­வில் தொழில் துவங்­கு­வ­தற்­கான சாத்­தி­யக் குறி­யீட்­டில், 2018ம் ஆண்­டில் தமி­ழ­கத்­துக்கு இரண்­டா­வது இடம் கிடைத்­துள்­ளது. 2017ம் ஆண்டை விட நான்கு இடங்­கள் முன்­னேறி, புதிய இடத்தை தமி­ழ­கம் பிடித்­துள்­ளது.


உலகம்

1.ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறும் நட்பு நாடுகள், அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ள முடியாது என்று அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.


விளையாட்டு

1.சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடம் பெற்றுள்ளது.


ன்றைய தினம்

  • ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது(1967)
  • ஐநா சாசனம் அமெரிக்காவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது(1945)
  • பாகிஸ்தான் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது(1947)
  • வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது(1942)
  • தென்னகம்.காம் செய்தி குழு