தமிழகம்

1.தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தபால் வாக்குகள் அளிக்கப்பட்டன. பயிற்சி அளிக்கப்பட்ட இடங்களிலேயே வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளில் வாக்குச் சீட்டுகளை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் செலுத்தினர்.


இந்தியா

1.அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதை 60 -லிருந்து 62ஆக உயர்த்தியது கோவா அரசு.

2.மீண்டும் மோடி அரசு’ (பிர் ஏக் பார், மோடி சர்க்கார்) என்ற கோஷம் அடங்கிய பிரசார பாடல், பாஜக சார்பில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.”இனி நியாயம் கிடைக்கும்’ (அப் ஹோகா நியாய்) என்ற பிரசார கோஷம் அடங்கிய பாடலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்த் சர்மா அக்கட்சியின் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.


வர்த்தகம்

1.பிரிட்டனின்,‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தால், ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டு வரும் வர்த்தகம், முதலீடுகள் உள்ளிட்டவற்றுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என, ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு உறுதி அளித்துள்ளது.


உலகம்

1.சீனக் கடற்படையின் 70-ஆவது ஆண்டு தின விழாவில், இந்தியக் கடற்படையின் “ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் சக்தி’ ஆகிய இரண்டு கப்பல்கள் அணி வகுக்கவுள்ளன.

2.மாலத்தீவு நாடாளுமன்றத்துக்கு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில், முன்னாள் அதிபர் முகமது நஷீத் தலைமையிலான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி)  வெற்றி பெற்றுள்ளது.


விளையாட்டு

1.உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் ஞானசேகரன் சத்தியன்.


ன்றைய தினம்

  • ஐ.நா., முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அனான் பிறந்த தினம்(1938)
  • முதலாவது உலக கண்காட்சி பாரிஸ் நகரில் ஆர்மபமானது(1867)
  • லியாகத்-நேரு ஒப்பந்ததத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் கையெழுத்திட்டன(1950)
  • எகிப்தில் சூயஸ் கால்வாய், மீளத்திறக்கப்பட்டது(1957)

– தென்னகம்.காம் செய்தி குழு