தமிழகம்

1.நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தில்லியில் இருந்து சென்னைக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வந்தனர்.


இந்தியா

1.நிலவின் தரை பரப்புக்கு மேல் 2.1 கி.மீ. உயரத்தில் இறங்கிக்கொண்டிருந்த லேண்டருக்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.நிலவை 100 கி.மீ. தொலைவில் சுற்றிவரும் ஆர்பிட்டர் பகுதி ஓராண்டுக்கு இயங்கி, நிலவை புகைப்படம் எடுத்து தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து அனுப்பும்.
இந்த ஆர்பிட்டர் எடுக்கும் புகைப்படங்களைக் கொண்டு விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது ஆய்வு செய்து கண்டுபிடிக்க முடியும்.

2.நாடாளுமன்ற வளாகத்தில் ஃபிட் இந்தியா இயக்கத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.

3.பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (பிடிஐ) செய்தி நிறுவனத்தின் தலைவராக, பஞ்சாப் கேசரி பத்திரிகை குழுமத்தின் முதன்மை ஆசிரியரான விஜய்குமார் சோப்ரா வெள்ளிக்கிழமை ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.


வர்த்தகம்

1.வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ள தங்கப்பத்திர விற்பனையின் வெளியீட்டு விலையை கிராமுக்கு ரூ.3,890-ஆக நிர்ணயித்துள்ளதாக ரிசர்வ் வங்கி  தெரிவித்துள்ளது.


உலகம்

1.இந்தியா, அமெரிக்கா இடையேயான மிகப்பெரிய கூட்டு ராணுவப் பயிற்சி, வாஷிங்டனில் தொடங்கியது.

2.பாதுகாப்புத் துறையில் இந்தியா, தென்கொரியா இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, தென்கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜியோங் கியோங்டூவுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.

3.தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே-யில் 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செலுத்தி வந்த முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே, தனது 95-ஆவது வயதில் மரணமடைந்தார்.


விளையாட்டு

1.யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில்  செரீனா வில்லியம்ஸுடன் மோதுகிறார் கனடாவின் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரிஸ்கு.


ன்றைய தினம்

  • பிரேசில் விடுதலை தினம் (1822)
  • கூகுள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1998)
  • பாகிஸ்தான் விமானப்படை தினம்
  • கிரான் கொலம்பியா குடியரசு உருவானது(1821)

– தென்னகம்.காம் செய்தி குழு