தமிழகம்

1.இந்தியக் கடலோரக் காவல்படை சார்பில் சென்னையில் தொழில் நுட்பம் மற்றும் தளவாட மேலாண்மை குறித்த 14-வது மாநாட்டை கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் ராஜேந்திர சிங் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

2.பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாட்டை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.


இந்தியா

1.தெலங்கானா சட்டப் பேரவையை கலைக்குமாறு முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான மாநில அமைச்சரவை வியாழக்கிழமை பரிந்துரைத்தது. இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனிடம் அளிக்கப்பட்டது.

2.தில்லியில் சர்வதேச போக்குவரத்து மேம்பாட்டு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி  தொடங்கி வைக்கிறார்.


வர்த்தகம்

1.நடப்பாண்டின் ஜூன் காலாண்டில் இந்திய நிறுவனங்கள் அறிவித்துள்ள இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மதிப்பு கடந்தாண்டைக் காட்டிலும் 7 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.


உலகம்

1.இந்தியா மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை (2+2), தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுபோன்றதொரு பேச்சுவார்த்தை நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
பாதுகாப்புத் துறைக்கான தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

2.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவுக்குச் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டு பிரதமர் பாய்கோ போரிசோவை சந்தித்துப் பேசினார்.

3.விண்வெளித் துறையில் இந்தியா, பிரான்ஸ் இடையேயான ஒத்துழைப்பு மேலும் அதிகரித்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இவ்விரு நாடுகளும் வியாழக்கிழமை கையெழுத்திட்டன.


விளையாட்டு

1.சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் 16 வயது வீரர் செளரப் செளத்ரி தங்கம் வென்று அசத்தினார். இந்நிலையில் தென் கொரியாவின் சங்வோன் நகரில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை செய்துள்ளார்.

2.யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீரர்கள் ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.


ன்றைய தினம்

  • பிரேசில் விடுதலை தினம் (1822)
  • கூகுள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1998)
  • கிரான் கொலம்பியா குடியரசு உருவானது(1821)
  • தென்னகம்.காம் செய்தி குழு