Current Affairs – 7 October 2019
தமிழகம்
1.மாமல்லபுரத்தில் மோடி- ஷி ஜின்பிங் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்னை, பயங்கரவாத ஒழிப்பு, வர்த்தகம், இருதரப்பு உறவு ஆகிய விஷயங்கள் முக்கிய அம்சங்களாக இடம் பெற வாய்ப்பு இருப்பதாக வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2.மத்திய அரசின் ‘ராஷ்டிர அவிஷ்காா் அபியான்’ திட்டத்தின்கீழ் தமிழக அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 4 ஆயிரத்து 560 மாணவ, மாணவிகளை அண்டை மாநிலங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.
இந்தியா
1.விஜயதசமி தினத்தன்று, பிரான்ஸின் போா்டோ நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் ரஃபேல் போா் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. முதல் விமானத்தை, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் முறைப்படி பெற்றுக் கொள்கிறாா்.
2.இந்த ஆண்டின் சா்வதேச திரைப்பட விழா கோவாவில் அடுத்த மாதம் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
3.ராஜஸ்தான் மாநில உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இந்திரஜித் மஹந்தி பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு மாநில ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
4.ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக, பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் ஒருமனதாக மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.
வர்த்தகம்
1.மத்திய அரசு, வெளியிடும் தங்க சேமிப்பு பத்திரத்திற்கு, ஒரு கிராம், 3,788 ரூபாய் என, விலை நிர்ணயம்
செய்துள்ளது.
2.திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டு சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கமடைந்துள்ளதால் உள்நாட்டு வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது.
உலகம்
1.தங்களுக்கு எதிரான கொள்கைகளை அமெரிக்கா கைவிடாதவரை அந்த நாட்டுடன் அணுசக்திப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப் போவதில்லை என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
விளையாட்டு
1.உலக யூத் செஸ் சாம்பியன் போட்டியில் 18 வயதுக்குட்பட்டோா் பிரிவில் பிரகானந்தா, ஆா்யன் ஆகியோா் முன்னிலை தக்க வைத்துள்ளனா்.
2.சீன ஓபன் டென்னிஸ் மகளிா் பிரிவில் நவோமி ஒஸாகாவும், ஜப்பான் ஓபன் போட்டி ஆடவா் பிரிவில் ஜோகோவிச்சும் சாம்பியன் பட்டம் வென்றனா்.
3.தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வேகமாக 350 விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளா் முத்தையா முரளிதரன் சாதனையை சமன் செய்தாா் இந்தியாவின் அஸ்வின்.
இன்றைய தினம்
- ஜேம்ஸ் குக், நியூசிலாந்தை கண்டுபிடித்தார்(1769)
- ஜெர்மன், ஜனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது(1949)
- இஸ்ரேலிய அரசு, டேவிட் பென் கூரியன் என்பவரால் அமைக்கப்பட்டது(1951)
- ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாளுக்கான காப்புரிமம் பெறப்பட்டது(1806)
– தென்னகம்.காம் செய்தி குழு