தமிழகம்

1.தமிழகம் முழுவதும் 36 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

2.கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான பொருள்கள் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

3.மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சுமார் ரூ.22 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த மொத்த பழச்சந்தை வளாகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வரும் அக். 11 ஆம் தேதி திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இந்தியா

1.தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிúஸாரம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.

2.ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்கள் பகிரப்படுவதை தடுப்பதற்காக வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

3.அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட பிருத்வி-2 ஏவுகணை இரவு நேரத்தில் வெற்றிகரமாக சோதனை நடத்தி பார்க்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.மத்திய நேரடி வரிகள் வாரியம், நீண்ட கால மூலதன ஆதாய வரி சலுகை தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது.அதன்படி, பங்குகள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு யூனிட்டுகள், வர்த்தக அறக்கட்டளை யூனிட்டுகள் ஆகியவற்றின் விற்பனையில், பங்கு பரிவர்த்தனை வரி செலுத்தாத போதிலும், நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகை பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.ருமேனியாவின் அரசமைப்புச் சட்டத்தில், “குடும்பம்’ என்பதற்காக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான விநோத பொதுவாக்கெடுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.


விளையாட்டு

1.ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு மூன்றாம் நிலை வீரர் நிஷிகோரி தகுதி பெற்றுள்ளார்.

2.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனுடன் அனைத்து ரக (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) கிரிக்கெட் போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 2-ஆவது இந்திய வீரர் என்ற  சாதனையைப் படைத்தார்.

இதற்கு முன்பாக புவனேஸ்வர் குமார் இச்சாதனையை செய்த முதல் இந்திய பந்துவீச்சாளராக திகழ்கிறார்.

3.மலேசியாவின் ஜோஹோர் நகரில் நடைபெறும் 8-ஆவது சுல்தான் ஜோஹோர் கோப்பை துவக்க ஆட்டத்தில் இந்திய ஜூனியர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.


ன்றைய தினம்

  • ஜேம்ஸ் குக், நியூசிலாந்தை கண்டுபிடித்தார்(1769)
  • ஜெர்மன், ஜனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது(1949)
  • இஸ்ரேலிய அரசு, டேவிட் பென் கூரியன் என்பவரால் அமைக்கப்பட்டது(1951)
  • ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாளுக்கான காப்புரிமம் பெறப்பட்டது(1806)
  • தென்னகம்.காம் செய்தி குழு