தமிழகம்

1.தீபாவளி திருநாளில் சென்னையில் காற்று மாசு குறைந்து இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


இந்தியா

1.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி நகரம் அமைந்துள்ள பைசாபாத் மாவட்டத்துக்கு அயோத்தி மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

2.கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 5 தொகுதிகளில் 4 தொகுதிகளைக் கைப்பற்றி  வெற்றி பெற்றது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி. மேலும் பெல்லாரி தொகுதியில் 1999-க்குப் பிறகு முதல் முறையாக பாஜக தோல்வி கண்டு பின்னடைவு கண்டது.


வர்த்தகம்

1.ஜிம் – 2 என்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க, 1,500 பிரதிநிதிகள் இதுவரை பதிவு செய்துள்ளதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு சார்பில், வரும் ஜனவரி 23, 24ம் தேதிகளில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் நடைபெறுகிறது

2.நாட்டின் சேவைகள் துறை, அக்டோபரில், மிகச் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. அதிக அளவில் புதிய ஆர்டர்கள் கிடைத்ததால், இத் துறையில், வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என, ‘நிக்கி – மார்கிட்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


உலகம்

1.முதலாவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடக்கிறது. சுமார் 172 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த தலைவர்கள், வணிக மற்றும் தொழிற்துறையினர்கள், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

2.இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அமைச்சரவையில் இருந்து தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை துணை அமைச்சர் மனுஷா நாணயக்கார ராஜினாமா செய்துள்ளார்.


விளையாட்டு

1.சீனாவில் நடைபெற்று வரும் சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

2.உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்’ என்ற பெயரிலான கிரிக்கெட் விளையாட்டு அரங்கு திறந்து வைக்கப்பட்டது


ன்றைய தினம்

  • இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் பிறந்த தினம்(1888)
  • போலந்து வேதியியல் அறிஞர் மேரி க்யூரி பிறந்த தினம்(1867)
  • இந்திய ஆன்மிகவாதி கிருபானந்த வாரியார் இறந்த தினம்(1993)
  • உலகின் மிகப் பழமையான தி லண்டன் கசெட், முதலாவது இதழ் வெளியானது(1665)
  • உலகின் முதலாவது விமான தபால் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது(1910)
  • தென்னகம்.காம் செய்தி குழு