Current Affairs – 7 May 2019
தமிழகம்
1. நாடு முழுவதும் 18 லட்சம் மாணவ, மாணவியர் எழுதியுள்ள சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில், 99 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா
1.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக முன்னாள் பெண் ஊழியர் அளித்த பாலியல் புகாரில் நடவடிக்கைக்கான முகாந்திரம் இல்லை என்று கூறியுள்ள விசாரணைக் குழு, அந்தப் புகாரை நிராகரித்து விட்டது.
2.மும்பையில் வேலா என்ற ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பலின் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு இந்த நீர்மூழ்கிக் கப்பல், கடற்படையில் சேர்க்கப்படும்.
வர்த்தகம்
1.இந்தியாவின் சேவை துறையின் உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் 7 மாதங்கள் காணாத அளவுக்கு சரிவினை சந்தித்துள்ளது.
உலகம்
1.பப்புவா நியூகினியாவில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகாக பதிவாகியுள்ளது.
2.மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக புரட்சிகர கட்சியைச் சேர்ந்த லௌரன்டிகோ கோர்டிஸோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
1.ஏடிபி தரவரிசையில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்.
20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெடரர், 3 ஆண்டுகள் கழித்து களிமண் தரை மைதான போட்டிகளில் பங்கேற்க உள்ளார். முதன்முறையாக மாட்ரிட் ஓபன் போட்டியில் ஆட உள்ளார்.
இன்றைய தினம்
- உலக ஆஸ்துமா நோய் தினம்
- நார்வே தேசிய தினம்
- வங்காள மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்(1861)
- சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் இறந்த தினம்(1539)
- ஐரோப்பிய அமைப்பு உருவாக்கப்பட்டது(1948)
- சோனி நிறுவனம் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது(1946)
– தென்னகம்.காம் செய்தி குழு