Current Affairs – 7 May 2018
தமிழகம்
1.மத்திய அரசின் கிராம சுயராஜ்ஜியம் திட்டத்தின் கீழ் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் மானிய விலையில் எல்இடி மின்விளக்கு விநியோகம் வரும் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
2.தமிழகத்தில் ஆன்-லைனில் பத்திரப் பதிவு செய்யும் நடைமுறை முழுமையான அளவில் புழக்கத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரையிலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா
1.வீடுகளுக்கே சென்று டீசலை விற்பனை செய்யும் திட்டத்தை மும்பையில் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் (ஹெச்.பி.) தொடங்கியுள்ளது.
வர்த்தகம்
1.பட்டாணி இறக்குமதிக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளதால், அதன் விலை உயர்ந்து,
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
உலகம்
1.பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அசான் இக்பால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதால் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு
1.இங்கிலாந்தின் பிரபல மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் பயிற்சியாளர் மேலாளரும், அலெக்ஸ் பெர்குஸனுக்கு அவசர மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
2.தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன் போட்டிகளில் இந்தியா 20 தங்கப் பதக்கத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.
இன்றைய தினம்
- உலக ஆஸ்துமா நோய் தினம்
- நார்வே தேசிய தினம்
- வங்காள மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்(1861)
- சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் இறந்த தினம்(1539)
- ஐரோப்பிய அமைப்பு உருவாக்கப்பட்டது(1948)
- சோனி நிறுவனம் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது(1946)
–தென்னகம்.காம் செய்தி குழு