தமிழகம்

1.தமிழகத்தில் 482 “மக்கள் மருந்தகம்’ (ஜன்ஒளஷதி) அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன. 2020-ஆம் ஆண்டுக்குள் தேசிய அளவில் ஒன்றியம் தோறும் மேலும் 2,500 மக்கள் மருந்தகங்களை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள், சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

2.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.


இந்தியா

1.அயோத்தி விவகாரத்தில் இருதரப்பும் ஏற்கும் வகையில் தீர்வு காண்பதற்கு, மத்தியஸ்தர்களின் பெயர்களை அளிக்கும்படி மனுதாரர்களை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பான தனது தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

2.ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வரும் மோட்டார் கண்காட்சியில் மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த பினின்ஃபரினா நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் சூப்பர் காரை அறிமுகம் செய்தது.

2.நாடு முழுவதும் ஜனவரி மாதம் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஜனவரி மாதம் தேயிலை உற்பத்தி 13.96 மில்லியன் கிலோவாக இருந்தது. கடந்த ஆண்டில் இதே மாதம் நாடு முழுவதும் 17.68 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி இருந்தது.


உலகம்

1.நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக இஸ்ரேல் நாட்டு தனியார் நிறுவனம் அனுப்பியுள்ள பெரஷீத் ஆய்வுக் கலம், தன்னைத் தானே எடுத்துக் கொண்ட கைப்படத்தை (செல்ஃபி) முதல் முறையாக பூமிக்கு அனுப்பியுள்ளது.

2.புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிப்பதற்காக பாகிஸ்தானுக்கு வெளியுறவுத் துறை துணை அமைச்சரை சீனா அனுப்பி வைத்துள்ளது.


விளையாட்டு

1.ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்திய  வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்.

2.பிரான்சில் நடைபெற்று வரும் நாய்சியல் ஓபன் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் ஃபெடோர்சக்கைத் தோற்கடித்து ஈஎல்ஓ தரவரிசையில் 2500 புள்ளிகளைக் கடந்துள்ளார் இனியன். இதையடுத்து கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான முழுத்தகுதிகளை அடைந்து இந்தியாவின் 61-வது கிராண்ட் மாஸ்டர் என்கிற பெருமையைத் தற்போது பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • அல்பேனியா ஆசிரியர் தினம்
  • ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது(1798)
  • அலெக்சாண்டர் கிரகாம்பெல் தொலைப்பேசிக்கான காப்புரிமம் பெற்றார்(1876)
  • பாலஸ்தீனத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது(1996)

– தென்னகம்.காம் செய்தி குழு