தமிழகம்

1.ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்களைத் திறந்து வைக்க வகை செய்யும் உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் பணியாற்றும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை உருவாக்கித் தர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

2.அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பி.சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்தியா

1.நிதி ஆயோக் அமைப்பை மாற்றியமைப்பதற்கும், இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை உறுப்பினராக சேர்ப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

2.பி.எஸ். 6 வாகன விதிகள் அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

3.பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு உள்பட மேலும் 5 அமைச்சர்கள் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.


வர்த்தகம்

1.இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் நிறுவனர் அஸிம் பிரேம்ஜி, அந்த நிறுவனத்தின் செயல் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.அவருக்குப் பதிலாக, நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை அவரது மகன் ரிஷத் ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 8.8 கோடி 5ஜி இணைப்புகள் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சர்வதேச தொலைத் தொடர்பு அமைப்பான ஜிஎஸ்எம்ஏ தெரிவித்துள்ளது.

3.கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 0.25 சதவீதம் குறைத்துள்ளது.


உலகம்

1.ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேச இருப்பதாக சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

2.ஃபின்லாந்தில், பெண் அமைச்சர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்றது.ஃபின்லாந்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சோஷலிச ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது.
அதையடுத்து, மிதவாதக் கட்சிகளுடன் சேர்ந்து அந்தக் கட்சி புதிய அரசை அமைத்தது.பிரதமராக சோஷலிச ஜனநாயகக் கட்சியின் தலைவர் அன்ட்டி ரின்னி பதவியேற்றார்.


விளையாட்டு

1.ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் 300 பாட்மிண்டன் சீரிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றோடு இந்திய அணியின் பங்கேற்பு முடிவடைந்தது.

2.எப்ஐஎச் ஹாக்கி சீரிஸ் பைனல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 10-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

3.பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி காலிறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் சிமோனா ஹலேப் தோல்வியுற்று வெளியேறினார்.


ன்றைய தினம்

  • பெரு கொடி நாள்
  • மகாத்மா காந்தி தனது ஒத்துழையாமை இயக்கத்தை துவக்கினார்(1893)
  • நார்வே, சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது(1905)
  • உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் துவக்கி வைக்கப்பட்டது(1975)
  • சோனி நிறுவனத்தின் பீட்டாமேக்ஸ் வீடியோ கேசட் ரெக்கார்டர் விற்பனைக்கு விடப்பட்டது(1975)

– தென்னகம்.காம் செய்தி குழு