தமிழகம்

1.கோவை-கேஎஸ்ஆர் பெங்களூரு இடையே இரண்டு அடுக்கு வசதியுடன் கூடிய உதய் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

2.ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வு செய்யும் முடிவு அரசின் பரிசீலனையில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.


இந்தியா

1.மத்­திய அரசு, சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­க­ளுக்­கான கொள்­கை­களை மறு ப­ரி­சீ­லனை செய்ய, குழு அமைத்­துள்­ளது.இக்­கு­ழு­வின் தலை­வ­ராக, ‘பாரத் போர்ஜ்’ நிறு­வ­னத்­தின் தலை­வர், பாபா கல்­யாணி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

2.நலிவடைந்த பொதுத் துறை நிறுவனங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் மூடுவது தொடர்பாக திருத்தப்பட்ட விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


வர்த்தகம்

1.நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது.


உலகம்

1.ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் முக்கியப் பங்காற்றும் என்று ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
சீனாவின் குயின்டோ நகரில் வரும் 9, 10-ஆம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறவுள்ளது.


விளையாட்டு

1.பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஒன்றில் ருமேனியாவின் சிமோனா ஹேலப்-ஸ்பெயினின் கார்பின் முகுருஸா ஆகியோர் மோதவுள்ளனர்.


ன்றைய தினம்

  • பெரு கொடி நாள்
  • மகாத்மா காந்தி தனது ஒத்துழையாமை இயக்கத்தை துவக்கினார்(1893)
  • நார்வே, சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது(1905)
  • உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் துவக்கி வைக்கப்பட்டது(1975)
  • சோனி நிறுவனத்தின் பீட்டாமேக்ஸ் வீடியோ கேசட் ரெக்கார்டர் விற்பனைக்கு விடப்பட்டது(1975)

–தென்னகம்.காம் செய்தி குழு