தமிழகம்

1.மருத்துவப் படிப்புகளில் முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் திட்டம் குறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை (ஜூலை 8) அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறுகிறது.


இந்தியா

1.யுனெஸ்கோவின் பாரம்பரியம் மிகுந்த நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரும் இடம்பிடித்துள்ளது.

2.ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு நிரந்தர வருமான வரி கணக்கு (பான்) எண்ணுக்குப் பதிலாக, ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம் என்று வருவாய்த் துறைச் செயலர் அஜய் பூஷண் பாண்டே கூறினார்.


வர்த்தகம்

1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 42,767 கோடி டாலராக (ரூ.29.93 லட்சம் கோடி) அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது.

2.வீட்டுவசதி நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, தேசிய வீட்டுவசதி வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்ப பெற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


உலகம்

1.அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகுகளாகப் பதிவான அந்த நிலநடுக்கம், அந்தப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையானது என்பது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு

1.பிரான்ஸின் லியான் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அமெரிக்காவும்- ஐரோப்பிய சாம்பியன் நெதர்லாந்தும் மோதுகின்றன.

2.விம்பிள்டன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்றுக்கு சிறுமி கோரி கவுஃப் தகுதி பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • சாலமன் தீவுகள் விடுதலை தினம்(1978)
  • இந்தியாவில் முதல் முறையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது(1896)
  • கனடாவில் ஆங்கிலத்துடன் பிரெஞ்சு மொழியும் அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது(1969)
  • இந்தியாவின் தாஜ்மஹால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது(2007)

– தென்னகம்.காம் செய்தி குழு