தமிழகம்

1.கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டடங்களுக்கு நகர ஊரமைப்புத்துறை இயக்குநரின் அனுமதி பெற வேண்டும் என்ற தமிழக பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இந்தியா

1.பாஜக தேர்தல் அறிக்கை குழுத் தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2.விமான நிலையங்களைப் போன்று ரயில் நிலையங்களிலும் உயர் பாதுகாப்புச் சோதனை அமைப்பை ஏற்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.


வர்த்தகம்

1.வெளிநாட்டு கடன்பத்திர விற்பனை மூலம் ரூ.10,500 கோடியை (150 கோடி டாலர்) திரட்ட பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) திட்டமிட்டுள்ளது.


உலகம்

1.மலேசிய மன்னர் சுல்தான் முகமது (49), தனது பட்டத்தைத் துறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.ஆசியக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

2.42 ஆண்டுகளுக்கு பின் 9-ஆவது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன் போட்டி (பி டிவிஷன்) சென்னையில் இன்று தொடங்குகிறது.


ன்றைய தினம்

  • அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி திறக்கப்பட்டது(1782)
  • வில்லியம் கென்னடி டிக்சன், அசையும் படத்துக்கான காப்புரிமம் பெற்றார்(1894)
  • அமெரிக்காவில் முதல் முறையாக அரசு தலைவர் தேர்தல் நடைபெற்றது(1789)
  • புரூணை, ஆசியான் அமைப்பில் உறுப்பு நாடாக இணைந்தது(1984)

– தென்னகம்.காம் செய்தி குழு