தமிழகம்

1.தமிழக சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (பிப். 8) கூடுகிறது. அப்போது, 2019-2020-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

2.சென்னை அருகே ரூ.2000 கோடி செலவில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.


இந்தியா

1.தேசிய அளவில் பசு ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2.வருமான வரி கணக்குத் தாக்கலுக்கு பான் எண் (நிரந்தர கணக்கு எண்), ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

3.பிரபல புல்லாங்குழல் இசைக்கலைஞர் ராஜேந்திர பிரசன்னா, கதக் நடனக் கலைஞர் சோபா கோஷெர் உள்பட 42 பேருக்கு சங்கீத நாடக அகாதெமி விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை வழங்கினார்.

4.நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு 20 நீதிபதிகள் உள்ளனர் என்று மக்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

5.தென் அமெரிக்க பகுதியில் இடம் பெற்றிருக்கும் பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏரியன் 5விஏ-247 ராக்கெட் மூலம் இந்தியாவின் ஜிசாட்-31 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் புதன்கிழமை அதிகாலை வெற்றிகரமாக ஏவப்பட்டு, திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.


வர்த்தகம்

1.அன்­றாட பங்கு வர்த்­த­கத்­தில் திடீர் ஏற்ற, இறக்­கத்தை தீவி­ர­மாக கண்­கா­ணிக்­கு­மாறு, பங்­குச் சந்­தை­க­ளுக்கு, ‘செபி’ உத்­த­ர­விட்­டுஉள்­ளது.

2.பொதுத் துறை­யைச் சேர்ந்த, ஏர் – இந்­தியா நிறு­வ­னத்­தின் தலை­வர், பிர­தீப் சிங் கரோலா, விமான போக்­கு­வ­ரத்து துறை செய­ல­ராக, பணி மாற்­றம் செய்­யப்­பட்­டு உள்­ளார்.


உலகம்

1.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான 2-ஆவது சந்திப்பு வியட்நாமில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.சென்னையில் 12ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் 29ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


ன்றைய தினம்

  • கிரனடா விடுதலை தினம்(1974)
  • ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1992)
  • சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது(1971)
  • புளூட்டோ, நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது(1979)

– தென்னகம்.காம் செய்தி குழு