Current Affairs – 7 December 2018
தமிழகம்
1.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய ஆர்வலர் நெல். ஜெயராமன்(50) வியாழக்கிழமை காலமானார்.
நுகர்வோர் பாதுகாப்புக் குழுவைத் தொடங்கி, தீவிரமாக செயல்பட்டதன் காரணமாக, நுகர்வோர் பாதுகாப்பு குறித்த அரசு சார்பிலான பல்வேறு அமைப்புகளில் ஆலோசகராக விளங்கினார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிரியேட் நமது நெல்லைக் காப்போம் என்ற அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளராக செயல்படத் தொடங்கினார்.
அழிவின் விளிம்பில் இருந்த பாரம்பரிய நெல் ரகங்களையும், இயற்கை விவசாயத்தையும் காப்பாற்ற சிறப்பாக பங்காற்றியவர் என்ற அடிப்படையில் ஜெயராமனை, இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் நெல் ஜெயராமன் என அடையாளப்படுத்தினார்.
2.மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டும் நடவடிக்கைகளுக்காக கர்நாடக மாநிலத்துக்கும் அதற்கு அனுமதி அளித்ததற்காக மத்திய நீர் வளத் துறைக்கும் சட்டப் பேரவையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
3.வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என போலீஸார் சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
இந்தியா
1. உள்கட்டமைப்புத் திட்ட ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஏதுவாக, யூனியன் பிரதேசங்களை நிர்வகிக்கும் துணைநிலை ஆளுநர்கள், நிர்வாகிகளுக்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் அதிகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
2. வேளாண் உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதியை வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கி, ரூ.4.24 லட்சம் கோடியாக அதிகரிக்கும் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
வர்த்தகம்
1.இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்திலான சேவை வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் அறிமுகமாகும் என இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) செயலர் எஸ்.கே. குப்தா தெரிவித்துள்ளார்.
2.நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 7.2 சதவீதமாக தரக் குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச் குறைத்துள்ளது.
3.ரெனோ நிஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியாவின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பிஜு பாலேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
4.அடுத்த, 20 ஆண்டுகளில், உலகளவில், வேகமான பொருளாதார வளர்ச்சி கண்டு வரும், ‘டாப் 10’ நகரங்கள் அனைத்தையும் கொண்ட நாடாக, இந்தியா திகழும்’ என, பிரிட்டனைச் சேர்ந்த, ஆய்வு நிறுவனமான, ‘ஆக்ஸ்போர்டு எக்கனாமிக்ஸ்’ தெரிவித்துள்ளது.
உலகம்
1.சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில், 8 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான சிறுபான்மை முஸ்லிம் இனத்தவர், அரசு அமைத்துள்ள தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2.ஈரானிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கான பணப் பரிமாற்றம் முழுவதையும் இந்திய ரூபாயிலேயே மேற்கொள்வதற்காக இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
விளையாட்டு
1.உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை ஏ பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் ஆர்ஜென்டீனாவை 5-3 என வீழ்த்தியது பிரான்ஸ். மேலும் ஸ்பெயின்-நியூஸிலாந்து அணிகளின் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.
2.அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய சாதனையை படைத்துள்ளார் பாக்.வீரர் யாசிர் ஷா. இதன் மூலம் 82 ஆண்டுகள் சாதனையையும் அவர் முறியடித்தார்.
இன்றைய தினம்
- இந்திய கொடி நாள்
- ஈரான் மாணவர் தினம்
- இஸ்ரேல் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டது(1988)
- சீனக் குடியரசின் அரசு, நான்கிங் நகரில் இருந்து தாய்வானுக்கு மாறியது(1949)
- தென்னகம்.காம் செய்தி குழு