இந்தியா

1.உலகின் பாரம்பரியமிக்க இடங்களுக்கான யுனெஸ்கோ பட்டியலில், இந்தியாவின் தாஜ்மகால் இரண்டாவது நினைவு சின்னமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2.பாரளுமன்றத்தில் உள்ள கேன்டீனில் பணம் செலுத்துவதற்கு பதிலாக கார்ட் பயன்படுத்தும் முறை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.


உலகம்

1.ரஷ்ய பாராளுமன்றத்தில் அமெரிக்க பத்திரிக்கையாளர்கள் நுழைவதற்கு தடை விதித்து ரஷ்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


விளையாட்டு

1.இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிவடைந்ததை அடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது.தொடர்ந்து 9 டெஸ்ட் தொடர்களை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் (International Civil Aviation Day).
விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டப்பிறகு பயணத்தின் நேரம் குறுகிப் போனது. தற்போது சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. இதற்கான ஒரு அமைப்பு 1944இல் ஆரம்பிக்கப்பட்டு, அதன் 50 ஆவது ஆண்டு விழா 1994ஆம் ஆண்டில் கொண்டாடியது. இந்த அமைப்பின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு ஐ.நா. பொதுச்சபை டிசம்பர் 7 ஆம் தேதியை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினமாக அறிவித்தது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு