தமிழகம்

1.தென்னிந்திய தொழில் நிறுவன உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தேசிய தொழிலாளர் நல்லுறவு மாநாடு வரும் 9, 10 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார்.

2.வீட்டுவசதித் துறை முதன்மைச் செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளராக டி.கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இந்தியா

1.பாஜக மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), உடல்நலக்குறைவு காரணமாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இரவு காலமானார்.

2.ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்குவதற்கான தீர்மானம், ஜம்மு-காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா-2019 ஆகியவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. ஏற்கெனவே இந்தத் தீர்மானமும், மசோதாவும் மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டுவிட்டன. எனவே, அவற்றுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்டது.

3.விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை, புவி சுற்றுவட்டப் பாதையில் ஐந்தாவது நிலை உயர்த்தும் பணியையும் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நிகழ்த்தினர்.


வர்த்தகம்

1.என்எல்சி இந்தியா நிறுவனம் 30.6.2019 அன்றுடன் நிறைவடைந்த நிகழ் நிதியாண்டின் (2019-20) முதல் காலாண்டில் ரூ.323.04 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.07 சதவீதம் அதிகமாகும்.


உலகம்

1.தங்களது எதிர்ப்பை மீறி அமெரிக்காவும், தென் கொரியாவும் கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடங்கியதையடுத்து, வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது.


விளையாட்டு

1. ஆசிய ஆடவர் 23 வயதுக்குட்பட்டோர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய அணி முதன்முறையாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.


ன்றைய தினம்

  • திமுக தலைவர் கருணாநிதி மறைந்த தினம் (2018)
  • இந்திய கைத்தறி தினம்
  • இந்திய அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம்(1925)
  • இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இறந்த தினம்(1941)
  • அமெரிக்க போர்ப் படை உருவாக்கப்பட்டது(1789)
  • இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது(1832)
  • முதல் கால்குலேட்டர் ஐபிஎம் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது(1944)

– தென்னகம்.காம் செய்தி குழு