தமிழகம்

1.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை திங்கள்கிழமை மாலை அறிக்கை வெளியிட்டது.

2.சென்னையில் 44-ஆவது ஆண்டு கம்பன் விழா வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. விழாவில் பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது வழங்கப்படுகிறது.

3.யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கோபகுமார் சென்னையில்  பொறுப்பேற்று கொண்டார்.

4.பல்கலைக்கழகத் தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே நடைமுறையை அறிமுகப்படுத்த தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


இந்தியா

1.தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு (என்சிபிசி) அரசமைப்பு அந்தஸ்து வழங்க வகைசெய்யும் சட்டமசோதா, நாடாளுமன்றத்தில்  நிறைவேறியது.

2.மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு வரும் 9ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3.சுற்றுலா, வர்த்தகம், மருத்துவம் ஆகிய காரணங்களுக்காக இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு அளிக்கப்படும் இ-விசா வசதியை, 165 நாடுகளுக்கு நீட்டித்துள்ளதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் தெரிவித்தார்.

4.எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

5.குழந்தைகள் தத்தெடுப்பு விவகாரத்தில் நிலவும் பிரச்னைகளை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கும் அதிகாரம் அளிக்க வகை செய்யும் சிறார் நீதி மற்றும் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில்  தாக்கல் செய்யப்பட்டது.


வர்த்தகம்

1.அமெ­ரிக்­கா­வின் பெப்­ஸிகோ நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி, இந்­திரா நுாயி,பதவி வில­கு­கி­றார். எனி­னும் அவர், நிறு­வ­னத்­தின் தலை­வ­ராக, 2019 வரை நீடிப்­பார் என,
தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


உலகம்

1.ஒலியைப் போல் 5 மடங்கு வேகத்தில் பறக்கக் கூடிய ஜிங்காங்-2  போர் விமானத்தை சீனா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது.

2.பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக, கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின் பெயரை அந்தக் கட்சி திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


விளையாட்டு

1.வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் மூன்றாம் நிலை வீரர் ஜெர்மனியின் அலெக்சாண்டர் வெரேவ் பட்டம் வென்றார்.


ன்றைய தினம்

  • இந்திய கைத்தறி தினம்
  • அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம்(1925)
  • கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இறந்த தினம்(1941)
  • அமெரிக்க போர்ப் படை உருவாக்கப்பட்டது(1789)
  • முதல் கால்குலேட்டர் ஐபிஎம் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது(1944)
  • தென்னகம்.காம் செய்தி குழு