தமிழகம்

1.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டுவதற்கான உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.


இந்தியா

1.தேர்தல் நாளிலும், தேர்தலுக்கு முந்தைய நாளிலும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் முன் அனுமதியின்றி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடக்கூடாது என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


வர்த்தகம்

1.வீட்டு வசதிக்கு நிதி உதவி வழங்கி வரும் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் (ஐபிஹெச்) நிறுவனத்துடன் இணையவுள்ளதாக லக்ஷ்மி விலாஸ் வங்கி தெரிவித்துள்ளது.

2.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச் 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 41,200 கோடி டாலரை (ரூ.28.84 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


உலகம்

1.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதாரவாளரும், அமெரிக்க கருவூல மூத்த அதிகாரியுமான டேவிட் மால்பாஸ் உலக வங்கியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2.பிரெக்ஸிட் விவகாரத்தில் நீடித்து வரும் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, முக்கிய எதிர்க்கட்சியுடன் நிபந்தனையின்றி சமரசம் செய்துகொள்வதற்குத் தயாராக இருப்பதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் ((பிஃபா) கவுன்சில் உறுப்பினர் ஆன முதல் இந்தியர் என்ற சிறப்பைப் பெற்றார் இந்திய கால்பந்து கூட்டமைப்பு தலைவர் பிரஃபுல் பட்டேல்.

2.மலேசியாவுக்கு எதிரான மகளிர் ஹாக்கி டெஸ்ட் தொடரில் இந்தியா 2-ஆவது வெற்றியை பதிவு செய்தது.


ன்றைய தினம்

  • சர்வதேச சுகாதார தினம்
  • உலக சுகாதார நிறுவனம் ஐ.நா.வால் தொடங்கப்பட்டது(1948)
  • ஐ.பி.எம்., தனது சிஸ்டம் /360 ஐ அறிவித்தது(1964)
  • பிரான்ஸ், மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது(1795)
  • பிரான்சிடம் இருந்து சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது(1946)

– தென்னகம்.காம் செய்தி குழு