தமிழகம்

1.தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 46 பேரில் தமிழகத்தின் கரூர் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியப் பள்ளித் தலைமையாசிரியர் ஆர்.செல்வக்கண்ணன், கோபிச்செட்டிப்பாளையம் வைரவிழா மேல்நிலைப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் எம்.மன்சூர் அலி, புதுச்சேரி கூனிச்சம்பட்டு பாவேந்தர் பாரதிதாசன் அரசுத் தொடக்கப் பள்ளியின் பொறுப்புத் தலைமையாசிரியர் எஸ். சசிக்குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

2.இந்திய விண்வெளித் தந்தை என அழைக்கப்படும் விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழாவையொட்டி, திருநெல்வேலியில் ராக்கெட் மாதிரிகளுடன் விண்வெளித் துறை கண்காட்சி தொடங்கியது.

3.தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.) முதலீட்டை ஈர்க்க, டிஜிட்டல் ஊக்கமூட்டும் திட்டம் என்ற புதிய திட்டத்தை முதல்வர் கே. பழனிசாமி தொடக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி அமெரிக்காவின் சான் ஹீசே நகரில்  நடைபெற்றது.

4.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அரசு வழக்குரைஞர் பதவி கடந்த 2018-ஆம் ஆண்டு காலியானது. இதனைத் தொடர்ந்து, வழக்குரைஞர் வி.ஜெயபிரகாஷ் நாராயணன் பொறுப்பு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அவரை அந்தப் பதவியில் நிரந்தரமாக நியமித்து தமிழக அரசு  உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்தியா

1.இந்தியாவில் கடந்த 2017 ஏப்ரல் முதல் 2018 ஜனவரி வரையிலான 10 மாதங்களில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணையவழி ஊடுருவல்கள் நிகழ்ந்துள்ளன. இதன் மூலம் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை நிறுவனங்கள், பல்வேறு தனியார் நிறுவனங்களில் இருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளன.


வர்த்தகம்

1.பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (பிஎன்பி), ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவை இணைத்துக் கொள்வதற்கு பிஎன்பி இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

2.இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) 28 சதவீதம் அதிகரித்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


உலகம்

1.மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதுவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, காஷ்மீர் விவகாரம், இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைப்பது ஆகிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

2.வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்ததின் அடிப்படையில் அணு ஆய்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்குமாறு ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி உத்தரவிட்டுள்ளார்.

3.பிரிட்டனில் அடுத்த மாதம் 15-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தும் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் முடிவை அந்த நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது.


விளையாட்டு

1.யுஎஸ் ஓபன் போட்டியில் 2009-க்குப் பின்அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் 19 வயது இளம்பெண் என்ற பெருமையை கனடாவின் பியான்கா ஆன்ட்ரிஸ்கு பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • சுவிட்சர்லாந்து விடுதலை தினம்(1968)
  • கிழக்கு ருமேனியா, பல்கேரியாவுடன் இணைந்தது(1885)
  • ரஷ்யாவின் லெனின் கிராட் நகரம் மீண்டும் செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1991)

– தென்னகம்.காம் செய்தி குழு