தமிழகம்

1.தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

2.ஆதார் இல்லாத காரணத்துக்காக பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.


இந்தியா

1.சமூக வலைதளங்களில் குற்றவாளிகளின் தகவல்களைத் தேடுவதற்கும், அவா்களின் முகத்தைக் கண்டறிவதற்கும் நாட்டிலுள்ள பாதுகாப்பு முகமைகளுக்கு புதிய மென்பொருள்களை கொள்முதல் செய்ய இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

2.ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்றும், அதற்கு எதிரான சட்டப்பிரிவு 377ஐ ரத்து செய்வதாகவும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை அளித்துள்ளது.


வர்த்தகம்

1.கடந்த ஆகஸ்­டில், நாட்­டின் சேவை­கள் துறை வளர்ச்சி குறைந்­துள்­ளது.ஜூலை­யில், சேவை­கள் துறை, 22 மாதங்­களில் காணாத வளர்ச்சி வேகத்தை கண்­டி­ருந்­தது.


உலகம்

1.சூரியனை எக்ஸ்-ரே முறையில் படம் பிடிக்கும் வகையிலான விண்கலத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா, வெள்ளிக்கிழமை அனுப்பவுள்ளது.

2.இரு கொரிய நாடுகளின் அதிபர்களுக்கிடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து, தென்கொரியாவின் 5 உயரதிகாரிகள் அடங்கிய தூதுக்குழு ஒன்று வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் உடன் சந்தித்து ஆலோசனை நடத்தியது.


விளையாட்டு

1.ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் 10 மீ ஏர் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.


ன்றைய தினம்

  • பாகிஸ்தான் பாதுகாப்பு தினம்
  • சுவிட்சர்லாந்து விடுதலை தினம்(1968)
  • கிழக்கு ருமேனியா, பல்கேரியாவுடன் இணைந்தது(1885)
  • ரஷ்யாவின் லெனின் கிராட் நகரம் மீண்டும் செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1991)
  • தென்னகம்.காம் செய்தி குழு