தமிழகம்

1.அக்டோபர் 8ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


இந்தியா

1.இந்திய ராணுவப் பயன்பாட்டுக்காக ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை ரூ.37 ஆயிரம் கோடிக்கு (500 கோடி டாலர்கள்) கொள்முதல் செய்வதற்கான முக்கிய ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோர் முன்னிலையில் அதற்கான உடன்படிக்கை கையெழுத்தானது.

2.ஈரான் நாட்டிடம் அடுத்த மாதத்திலும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

3.மகாராஷ்டிர மாநிலத்தில் விளையும் பிரசித்தி பெற்ற அல்போன்சா மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

4.பெங்களூரு துணை மேயர் ரமீலா வெள்ளிக்கிழமை (அக்.5) அதிகாலை மாரடைப்பால் காலமானார்.


வர்த்தகம்

1.இந்­தி­யா­வி­லி­ருந்து, ரஷ்ய நாட்­டுக்­கான ஏற்­று­மதி, 2016 – 17ம் ஆண்­டில், 18 சத­வீ­தம் வளர்ச்சி அடைந்­துள்­ளது என, ‘மேக் இன் இந்­தியா’ தெரி­வித்­துள்­ளது.

2.ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அதன் நிதி கொள்கை ஆய்வில் வங்கிகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் எதையும் செய்யவில்லை.
நடப்பு நிதியாண்டுக்கான நான்காவது நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

3.பரஸ்பர நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு செப்டம்பர் காலாண்டில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.


உலகம்

1.போர் நடைபெறும் பகுதிகளில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடியமைக்காக, சமூக ஆர்வலர்களான காங்கோ நாட்டு மருத்துவர் டெனிஸ் முக்வேஜேவுக்கும், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளால் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்த யாஜிதி இனப் பெண் நாடியா முராடுக்கும் 2018-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2.அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் நடைபெற்று வரும் சமாதானப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ ஞாயிற்றுக்கிழமை வட கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.


விளையாட்டு

1.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய கேப்டன் கோலி உலக சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக 1000-க்கு மேற்பட்ட டெஸ்ட் ரன்களை குவித்த முதல் கேப்டன் என்ற சாதனையையும், தொடர்ந்து 3 ஆண்டுகளாக 1000 ரன்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.மேலும் 2018-இல் ஒட்டுமொத்தமாக 1000 ரன்களை குவித்த முதல் வீரராகவும் உள்ளார் கோலி.


ன்றைய தினம்

  • எகிப்து – ராணுவ படை தினம் (1973 அக்டோபர் போர் நினைவாக)
  • ஆசிரியர் தினம் – இலங்கையில்
  • 1927 – முதலாவது பேசும் படம் த ஜாஸ் சிங்கர் வெளியானது.
  • 1995 – சூரியனுக்கு அடுத்ததாக கோளைத் தன்னகத்தே கொண்ட பெரும் விண்மீன் 51 பெகாசி கண்டறியப்பட்டது.
  • தென்னகம்.காம் செய்தி குழு