தமிழகம்

1.புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் தமிழ்மாமணி பாவலர் மணி சித்தன் (எ) ராதாகிருஷ்ணன் (98) ஞாயிற்றுக்கிழமை (நவ.4) காலமானார்.பாவேந்தர் பாரதிதாசனின் சீடரான இவர், அவரது குயில் பத்திரிகையில் முக்கியப் பங்காற்றினார்.
தொடக்க காலத்தில் பல் மருத்துவராகப் பணியாற்றிய ராதாகிருஷ்ணன், பின்னர் இலக்கியப் பணியில் ஈடுபட்டார். நாலாயிர திவ்விய பிரபந்தத்தை நன்கு அறிந்தவர். 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். ஜீயர் சுவாமிகளால் வைணவ செம்மல் என்ற பட்டம் பெற்றார்.

2.தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள குரூப் 2 குரூப் 2 தேர்வு திட்டமிட்டப்படி நவ.11 ஆம் தேதி நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது.


இந்தியா

1.ஐ.என்.எஸ் அரிஹந்த் அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பலானது திங்களன்று வெற்றிகரமாக கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்தியாவின் முப்படைகளும் அணு ஆயுதப் பயன்பாட்டில் முழுமை பெற்றுள்ள இந்த நாளானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓன்றாகும்.

2.ஆந்திரத்துக்கு தனி உயர்நீதிமன்றத்தை ஏற்படுத்தி கொள்வதற்கு உச்சநீதிமன்றம் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.


வர்த்தகம்

1.ஸ்மார்ட்போன் வாயிலாக, வங்கி கணக்கில் இருந்து எளிதாக பண பரிவர்த்தனை செய்ய உதவும், யு.பி.ஐ., செயலியில், நாள் ஒன்றுக்கு பத்து பரிவர்த்தனை மட்டுமே செய்யலாம் என, புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.


உலகம்

1.ஈரான் மீதான அமெரிக்க பொருளாதாரத் தடை திங்கள்கிழமை முதல் மீண்டும் முழு வீச்சில் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2.பெரும்பான்மையை நிரூபிக்காதவரை ராஜபட்சவை பிரதமராக அங்கீகரிக்க முடியாது என்று இலங்கை நாடாளுமன்ற தலைவர் கரு ஜெயசூர்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.சார்லோர்லக்ஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய இளம் வீரர் சுபாங்கர் டே சாம்பியன் பட்டம் வென்றார். ஜெர்மனியின் சார்பருக்கன் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.


ன்றைய தினம்

  • தஜிகிஸ்தான் அரசியலமைப்பு தினம்(1994)
  • டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டது(1844)
  • எட்வின் ஆம்ஸ்ட்ராங், எஃப்.எம்., ஒளிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்(1935)
  • புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1944)
  • போலந்தில் 2வது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது(1918)
  • தென்னகம்.காம் செய்தி குழு