தமிழகம்

1. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை ஆகிய அமைப்புகளின் சார்பில் சென்னை, தூத்துக்குடியில் 36-ஆவது வணிகர் தின மாநாடு இன்று நடைபெறவுள்ளது.


இந்தியா

1.ஒசூர் டி.வி.எஸ். தொழிற்சாலையில் 50 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் சரணாலயத்தில் 120 வகையான பறவைகள் தங்கியுள்ளன.
கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சியில் 320 ஏக்கரில் இயங்கி வரும் இந்தத் தொழிற்சாலை வளாகத்தில் பறவைகள் சரணாலயத்துக்கான வசதி செய்யப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.கே.பி.எம்.ஜி., பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர், எர்னஸ்ட் அண்டு யங், டெலாய்ட்’ ஆகிய நான்கு கணக்கு தணிக்கை நிறுவனங்கள்,  சட்டச் சேவைகள் வழங்க, டில்லி பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.


உலகம்

1.அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலுள்ள கட்டடமொன்றுக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி துர்கா அகர்வால் மற்றும் சுசீலா அகர்வாலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.ஸ்பெயினில் நடைபெற்றுவரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில், சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நவாமி ஒஸாகா 6-2, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் ஸ்லோவேகியா வீராங்கனை டொமினிக்கா கிபுல்கோவாவை வீழ்த்தினார்.


ன்றைய தினம்

  • இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது(1854)
  • ஈபெல் டவர், பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்து விடப்பட்டது(1889)
  • இந்திய விடுதலை வீரர் மோதிலால் நேரு பிறந்த தினம்(1861)
  • பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேர் பிறந்த தினம்(1953)

– தென்னகம்.காம் செய்தி குழு