தமிழகம்

1.ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 10 மெகாவாட் சூரியமின்சக்தி உற்பத்தித் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

2.வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எஸ். தாமரைச் செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமன ஆணையை தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.


இந்தியா

1.குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

2.மக்களவையில் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்று நாடு முழுவதும் 500 இடங்களில் கூடுதலாக ரயில் நிறுத்தங்களை ஏற்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

3.அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை விரைவில் 1 கோடியைத் தாண்டும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.


வர்த்தகம்

1.நாடு முழுவதும் ஜனவரி மாதம் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஜனவரி மாதம் தேயிலை உற்பத்தி 13.96 மில்லியன் கிலோவாக இருந்தது. கடந்த ஆண்டில் இதே மாதம் நாடு முழுவதும் 17.68 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி இருந்தது.

2.ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக, தனியார் துறை வங்கிகளான கர்நாடக வங்கி, கரூர் வைஸ்யா வங்கி மற்றும் பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கு ரூ. 8 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

3.ஜனவரியை விட, பிப்ரவரியில், சேவைகள் துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இது, இத்துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘நிக்கி – ஐ.எச்.எஸ்., மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 52.5 புள்ளிகளாக உயர்ந்திருப்பதில் இருந்து, தெரிய வந்துள்ளது.ஜனவரியில், சேவைகள் துறை வளர்ச்சி குறித்த குறியீடு, 52.2 புள்ளிகள்; 2018, டிசம்பரில், 53.7 புள்ளிகளாக காணப்பட்டது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தால், அது, வளர்ச்சியை குறிக்கும்.

4.இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில் நடைபெறும், சர்வதேச பொறியியல் கண்காட்சி வாயிலாக, 600 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


உலகம்

1.இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த “வர்த்தக முன்னுரிமை’ அந்தஸ்தை ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

2.கனடா நிதியமைச்சர் ஜேன் பில்பாட் திங்கள்கிழமை தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்தார். இதன் மூலம், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

3.ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையின் மூலம் பெர்லினைச் சேர்ந்த எச்ஐவி பாதித்த நபர் அந்நோயில் இருந்து முற்றிலும் விடுபட்டிருக்கும் 2வது மனிதராக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளார்.அவரது அடையாளம் வெளியிடப்படவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த டிமோதி ரெய் ப்ரவுன் என்பவருக்கு ஜெர்மனியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது வரை எச்ஐவி தொற்று இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.


விளையாட்டு

1.பிஃபா மகளிர் உலகக் கோப்பை 2019 கால்பந்து போட்டியில் விடியோ உதவி நடுவர் தொழில்நுட்பம் வார் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2.பாட்மிண்டனில் பிரதான சர்வதேச போட்டிகளில் ஒன்றான ஆல் இங்கிலாந்து சாம்பியன் போட்டிகள் பர்மிங்ஹாமில் புதன்கிழமை தொடங்குகிறது.

3.சீனாவின் ஹாங்ஷு நகரில் வரும் 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியப் போட்டியில் முதன்முறையாக ஓசேனியா நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்புதலை ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் வழங்கியுள்ளது.


ன்றைய தினம்

  • கானா விடுதலை தினம்(1957)
  • ஈரானும் ஈராக்கும் எல்லை தொடர்பான உடன்பாட்டிற்கு வந்தன(1975)
  • உமர் கயாம், ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்(1079)
  • செர்பியன் ஆட்சி மீண்டும் அமைக்கப்பட்டது(1882)

– தென்னகம்.காம் செய்தி குழு