தமிழகம்

1.எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1.23 லட்சம் பேர் தேர்வெழுதியிருந்தனர். அவர்களில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த இரு ஆண்டுகளாக 40 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் இம்முறை 48.70 சதவீதமாக உயர்ந்துள்ளது.


இந்தியா

1.நாட்டின் பொருளாதார நிலை மற்றும் வேலையின்மை ஆகியவற்றைப் பற்றி ஆலோசித்து சரியான முடிவுகளை எடுப்பதற்காக 8 அமைச்சரவை குழுக்களை மாற்றி அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

2.ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி-20 அமைப்பின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3.இந்தியா-பிரான்ஸ் நாடுகளின் விமானப்படைகள் ட கூட்டுப் பயிற்சியில் வரும் ஜூலை மாதம் ஈடுபடவுள்ளன.


வர்த்தகம்

1. இந்தியப் பொருளாதாரம் வரும் 2019 – 2020 நிதியாண்டில் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

2.நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த மே மாதத்தில், 12 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவினை சந்தித்துள்ளது என, ‘நிக்கி – மார்க்கிட்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.


உலகம்

1.வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்காக வழங்கப்படும் “ஹெச்-1பி’ வகை நுழைவு இசைவுகளுக்கான (விசா) அனுமதி, கடந்த 2018-ஆம் ஆண்டில் 10 சதவீதம் குறைந்துள்ளது.

2.அமெரிக்க-இந்திய தொழில் கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) வழங்கும் தலைசிறந்த தலைமைக்கான சர்வதேச விருதுக்கு (குளோபல் லீடர்ஷிப்), கூகுள் வலைதள நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

3.வழக்கமான ஏவுதளங்களுக்குப் பதிலாக, கப்பலில் இருந்து “லாங் மார்ச்-11′ ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சீனா சாதனை படைத்துள்ளது.


விளையாட்டு

1.தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 2019 உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

2.சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) தலைவராக ஜியானி இன்ஃபேன்டினோ தொடர்ந்து 2ஆவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

3.ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டியின் 2-ஆவது சுற்றுக்கு பி.வி.சிந்து, சாய் பிரணீத், காஷ்யப், சமீர் வர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.


ன்றைய தினம்

  • சுவீடன் தேசிய தினம்
  • இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)
  • ஒய்.எம்.சி.ஏ., லண்டனில் அமைக்கப்பட்டது(1844)
  • குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு, நியூசவுத்வேல்ஸில் இருந்து பிரிக்கப்பட்டது(1859)

– தென்னகம்.காம் செய்தி குழு