தமிழகம்

1.தமிழகத்தில் மக்காத பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக முதல்வர்  அறிவித்துள்ளார்.

2.திருச்சியில் நவீன வன மர விதை மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.


இந்தியா

1.ரயில் பயணம் சுகமாக அமையும் பொருட்டு. அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிகமாக சுமையை கொண்டு வருபவர்களுக்கு, 6 மடங்கு அபராதம், விரைவில் வசூலிக்கப்பட இருப்பதாக ரயில்வே வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.


வர்த்தகம்

1.கடந்த மே மாதம், நாட்­டின் சேவை­கள் துறை வளர்ச்­சி­யில் பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ள­தாக, ‘நிக்கி – மார்­கிட்’ நிறு­வ­னத்­தின் ஆய்­வ­றிக்கை தெரி­விக்­கிறது


உலகம்

1.ஆண்டுதோறும் கொல்லப்படும் பத்திரிகையாளர்களை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள நியூசியம்” என்னும் அருங்காட்சியகம் கெளரவித்து வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த கெளரி லங்கேஷ் மற்றும் சுதீப் தத்தா பெளமிக் உள்ளிட்ட 18 பேரை அந்த அருங்காட்சியகம் கெளரவித்துள்ளது.

2.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.பிரெஞ்ச் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு அமெரிக்க வீராங்கனை மடிசன் கீய்ஸ் முதன்முதலாக தகுதி பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • சுவீடன் தேசிய தினம்
  • இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)
  • ஒய்.எம்.சி.ஏ., லண்டனில் அமைக்கப்பட்டது(1844)
  • குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு, நியூசவுத்வேல்ஸில் இருந்து பிரிக்கப்பட்டது(1859)

–தென்னகம்.காம் செய்தி குழு