தமிழகம்

1.தமிழகத்தில் புதிதாக மேலும் 582 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் தொடங்கப்படும் என்று பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

2.கர்ப்பிணிகளுக்கான தமிழக அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.5,300 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 56 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பலனடைந்துள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.


இந்தியா

பட்ஜெட் ஸ்பெஷல்:

வட்டி மானியம் அதிகரிப்பு: அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இதற்கு முன்பு மத்திய அரசு சார்பில் ரூ.1.5 லட்சம் வட்டி மானியம் அளிக்கப்பட்டு வந்தது. இது, தற்போது ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சம் வரை வருமான வரி இல்லை: ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர் வருமான வரி செலுத்த வேண்டிய தேவையில்லை.

செல்வந்தர்களுக்கு வரி: ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை வருவாய் உள்ள பெரும் பணக்காரர்களுக்கு 3 சதவீத கூடுதல் வரியும், ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் உள்ளவர்களுக்கு 7 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்படும்.

2024-க்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர்: வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் மாநில அரசுகளுடன் இணைந்து அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் சுகாதாரமான குடிநீர் கிடைப்பது உறுதிசெய்யப்படும்.

பெண்களுக்கு கடனுதவி: நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்படும்.

பெரு நிறுவன வரி குறைப்பு:
ரூ. 400 கோடி வரை விற்றுமுதல் ஈட்டும் தொழில் நிறுவனங்களுக்கான பெரு நிறுவன வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வட்டிக் கடன் சலுகை: சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும், பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் அரசு முன்முயற்சி எடுத்து வருகிறது. அதன்படி, பேட்டரி வாகனங்கள் வாங்குவோர், அதற்குரிய கடனுக்கான வட்டியைக் காட்டி, ரூ.1.5 லட்சம் வரை வருமான வரியில் சலுகைப் பெறலாம்.

அந்நிய முதலீடு ஊக்குவிப்பு: விமானப் போக்குவரத்து, ஊடகம், அனிமேஷன், காப்பீடு ஆகிய துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும். காப்பீட்டுத் துறையில் ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு பெறுவதற்கு அனுமதிக்கப்படும்.

2-ஆவது பெண் அமைச்சர்
சுதந்திர இந்தியாவில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த இரண்டாவது பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு, கடந்த 1970-ஆம் ஆண்டில், அப்போது நிதித் துறையை கூடுதலாக தம் வசம் வைத்திருந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1970-71-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

முக்கிய அம்சங்கள்
*வேளாண் துறைக்கு ரூ.1.39 லட்சம் கோடி ஒதுக்கீடு.
*பாதுகாப்புத் துறைக்கு ரூ.3.18 லட்சம் கோடி ஒதுக்கீடு.
*கல்வித் துறைக்கு 13 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடு.
*ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024-ஆம் ஆண்டுக்குள் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு.
*இளைஞர்கள் வெளிநாடுகளில் பணி வாய்ப்பு பெற உதவும் வகையில், அவர்களின் மொழித் திறன் மற்றும் நுண்ணறிவுத் திறனை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்படும்.
*வேளாண்-ஊரக தொழில்துறைகளில் திறன் மிகுந்த 75,000 தொழில் முனைவோர்களை மேம்படுத்தும் வகையில், புத்தாக்கம், ஊரக தொழில்துறைகள், தொழில்முனைவோர் ஊக்குவிப்புத் திட்டத்தின் (அஸ்பைர்) கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.
*அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களிலும், தலா ஒருவருக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடனுதவி.
*ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள, மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த *அனைவருக்கும் ரூ.5000 வரை கடன்.
*பான் அட்டை இல்லாதவர்கள் ஆதார் எண் மூலம் வருமான வரி தாக்கல் செய்ய அனுமதி.
*தற்போது நடைமுறையில் உள்ள 44 தொழிலாளர் நலச் சட்டங்கள், ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழில் துறை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன், தொழில்துறை தொடர்புகள் என்ற 4 பெரும் பிரிவுகளின் கீழ் ஒருங்கிணைக்கப்படும்.
*தங்கம் உள்ளிட்ட மதிப்புமிக்க உலோகங்கள் மீதான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிப்பு.
*2020 மார்ச் 31-ஆம் தேதி வரை வாங்கப்படும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி செலுத்துகையில் கூடுதலாக ரூ.1.5 லட்சம் வரை கழிவு.
*பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி மற்றும் சாலை-உள்கட்டமைப்புக்கான கூடுதல் வரி, லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு.
*காந்திய சிந்தனைகளை ஊக்குவிக்க உதவும் வகையில் என்சைக்ளோபீடியா பாணியில் காந்தி-பீடியா உருவாக்கப்படும்.
*பேட்டரி வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை.
*பேட்டரி வாகன கடன்களுக்கான வட்டித் தொகையைக் காட்டி, ரூ.1.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை பெறலாம்.
*2019-ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையானது 3.4 சதவீதத்தில் இருந்து 3.3 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
*ஆண்டு வருவாயாக ரூ.400 கோடி ஈட்டும் பெரு நிறுவனங்களுக்கான நிறுவன வரி 25 சதவீதமாக இருக்கும்.
*பொதுத் துறை வங்கிகள் மூலதனத்தையும், கடன் வழங்கும் திறனையும் ஊக்குவிக்க அவற்றுக்கு ரூ.70,000 கோடி வழங்கப்படும்.
*நேரடி வரி வசூல் 78 சதவீத அளவுக்கு அதிகரிப்பு.
*2013-14-இல் ரூ.6.38 லட்சம் கோடியாக இருந்த வரி வசூல், 2018-இல் ரூ.11.37 லட்சம் கோடியாக அதிகரிப்பு.
*வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்புத் தளவாடங்களுக்கு அடிப்படை கலால் வரியிலிருந்து விலக்கு.
*வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புத்தகங்கள் மீது 5 சதவீத கலால் வரி.
*ரூ.50 கோடிக்கு அதிகமாக ஆண்டு வருவாய் ஈட்டும் தொழில் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு குறைந்த கட்டணம்; அதன் வாடிக்கையாளர், வர்த்தகர்களுக்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது.
இந்திய கடவுச்சீட்டு வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்தவுடன் ஆதார் அட்டை வழங்கப்படும்.
*பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் அடுத்த 2 ஆண்டுகளில் 1.95 கோடி வீடுகள்.
*அனைவருக்கும் வீடு திட்டத்துக்கான வட்டி மானியம் ரூ.3.5 லட்சமாக உயர்வு.
*வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ரூ.17,000 கோடி.


வர்த்தகம்

1.இந்திய பாசுமதி அரிசியின் ஏற்றுமதி மதிப்பு கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.32,804.30 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையில், ஜி.டி.பி., எனும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2019 – 20ம் நிதியாண்டில், 7 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.மைண்ட்டிரீ’ நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட, மூவர், தங்கள் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.


உலகம்

1.அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி அந்த நாட்டு தலைநகர் வாஷிங்டனில் முதல் முறையாக ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
மேலும், கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் சுதந்திர தின உரையாற்றினார்.


விளையாட்டு

1.விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆடவர் இரட்டையர் நாக் அவுட் சுற்றுக்கு இந்தியாவின் தி விஜ் சரண் முன்னேறினார்.மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பர்  தோல்வியடைந்தார். ஆடவர் பிரிவில் நடால்,பெடரர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.


ன்றைய தினம்

  • மலாவி விடுதலை தினம்(1964)
  • தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் பிறந்த தினம்(1870)
  • டாலர், அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது(1785)
  • தாதாபாய் நெளரோஜி, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்(1892)

– தென்னகம்.காம் செய்தி குழு