Current Affairs – 6 July 2018
தமிழகம்
1.தமிழக சட்டப்பேரவையில் வரும் 9-ஆம் தேதி லோகா யுக்தா மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.
2.மத்திய கூட்டுறவு வங்கியின் 14 புதிய கிளைகள் துவக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
இந்தியா
1.கர்நாடக பட்ஜெட்டில் ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பிலான பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2.கிரிக்கெட் உள்பட அனைத்து விளையாட்டுகளிலும் சூதாட்டம் மற்றும் பந்தயம் வைக்கும் நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
3.மத்திய அரசின் “டிஜிலாக்கர்’ செயலி மற்றும் இணையதளத்தில் இருக்கும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் டிஜிட்டல் பிரதியை அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வர்த்தகம்
1.சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் டயர் உற்பத்தி ஆலையைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, தமிழக அரசுடன் சியட் நிறுவனம் செய்து கொண்டது.
2.ரிலையன்ஸ் குழுமம், ‘ஜியோகிகா பைபர்’ (Jio Giga Fiber) என்ற அதிநவீன
தொழில்நுட்பத்திலான இணையச் சேவையை அறிமுகம் செய்து உள்ளது.
உலகம்
1.சீனாவில் உள்ள பன்னாட்டு வர்த்தகப் பள்ளியின் தலைவராக தீபக் ஜெயின் என்ற இந்திய பேராசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு
1. இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
2.விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்றைய தினம்
- மலாவி விடுதலை தினம்(1964)
- தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் பிறந்த தினம்(1870)
- டாலர், அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது(1785)
- தாதாபாய் நெளரோஜி, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்(1892)
–தென்னகம்.காம் செய்தி குழு