தமிழகம்

1.சர்வதேச உவர்நீர் மீன்வளர்ப்பு குறித்த மாநாடு சென்னையில் வரும் ஜன.22-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 30 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டை மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் தொடங்கிவைக்கிறார்.

2.ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

3.அதிவேகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய “தேஜஸ்’ ரயில் சோதனை ஓட்டம் சனிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சோதனை ஓட்டத்தின்போது, இந்த ரயில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது.


இந்தியா

1.மத்தியப் பிரதேசத்தில் 55 லட்சம் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய அந்த மாநிலத்தை ஆளும் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2.ஜார்க்கண்ட் மாநிலம் பலாமுவில் ஒட்டுமொத்தமான இ-கிரகப்பிரவேசத்தை பிரதமர் பார்வையிட்டு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.


வர்த்தகம்

1.மத்திய அரசு, மூன்று பிராந்திய ஊரக வங்கிகளை (ஆர்ஆர்பி) ஒருங்கிணைத்துள்ளது.இது, ஜனவரி 1 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

2.ஏற்றுமதியாளர்களுக்கு கடன் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து வங்கி அதிகாரிகள் மற்றும் நிதி சேவை செயலர்களுடன் மத்திய அரசு அடுத்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது.

3.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பர் 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 12 கோடி டாலர் உயர்வைக் கண்டுள்ளது.

4.சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரிவிலக்கின் உச்சவரம்பை அதிகரிப்பது, பேரிடர் நல நிதிக்கான கூடுதல் வரி ஆகியவை தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழு  கூடி முடிவெடுக்கிறது.


உலகம்

1.யேமனில் சண்டை நிறுத்தம் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த, அந்த நாட்டின் ஹுதைதா நகருக்கு யேமனுக்கான ஐ.நா. சிறப்பு தூதர் மார்டின் கிரிஃபித் சனிக்கிழமை வந்தார்.

2.அமெரிக்காவின் மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப நிதி ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டால், அந்த நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

3.ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய கலாச்சார விழாக்களில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறிய பீட்டா அமைப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ள காளை திருவிழாவுக்கு வரவேற்பு அளித்துள்ளது.


விளையாட்டு

1.டாட்டா ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா-திவிஜ் சரண் இணை முதல் சாம்பியன் பட்டம் வென்றது.

2.தேசிய பள்ளிகள் விளையாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் 64-ஆவது தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக அணி 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது.


ன்றைய தினம்

  • ஈராக் ராணுவம் உருவாக்கப்பட்டது(1921)
  • மெக்சிகோ, அமெரிக்காவின் 47வது மாநிலமானது(1912)
  • சாமுவேல் மோர்ஸ், மின்னியல் தொலைத் தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதனை செய்தார்(1838)
  • கலாஷேத்திரா, சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது(1936)
  • அன்னை தெரசா, இந்தியாவில் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தா வந்தடைந்தார்(1929)

– தென்னகம்.காம் செய்தி குழு