தமிழகம்

1.வேளாண் பணிகளுக்கான இயந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பெறுவதற்கு வழி செய்யும் புதிய அம்சத்தின் செயல்பாட்டை (உழவன் செயலி) முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி துவக்கி வைத்தார்.

2.வன்னியர் பொது சொத்து நல வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வாரியத்துக்கான உறுப்பினர்கள், உறுப்பினர்-செயலாளர் உள்ளிட்டோரின் பெயர்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்தியா

1.அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தொடர்பான பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அனுமதி அளிக்குமாறு கோரிய மத்திய உள்துறை அமைச்சகத்தை உச்சநீதிமன்றம் கண்டித்தது.

2.கர்தார்பூர் வழித்தடத்துக்கான வரைவு திட்ட அறிக்கை மீது ஒப்புதல் பெறும் நோக்கில், அதனை பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

3.வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் விண்ணப்பங்களை 24 மணி நேரத்துக்குள் பரிசீலித்து, பணத்தைத் திருப்பி அளிக்கும் வகையிலான வழிமுறைகள், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4.சமையல் எரிவாயு பயன்பாட்டில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது என்று மத்திய எண்ணெய் வளத்துறை செயலாளர் எம்.எம்.குட்டி தெரிவித்தார்.


வர்த்தகம்

1.இந்தியப் பொருளாதாரம் வரும் நிதியாண்டில் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்ப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2.ஆர்இசி நிறுவனத்தின் பங்குகளை வாங்க பிஎஃப்சி நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) அனுமதி வழங்கியுள்ளது.


உலகம்

1.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை மொனாகோ அரசர் ஆல்பர்ட் தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

2.அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப்  உரையாற்றுகிறார்.


விளையாட்டு

1.2023 உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது.

2.சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வியுற்றார். மற்றொரு வீரர் சசிகுமார் முகுந்த் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.


ன்றைய தினம்

  • ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது(1819)
  • கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரி இறந்த தினம்(1827)
  • இந்திய அரசியல் தலைவர் மோதிலால் நேரு இறந்த தினம்(1931)
  • கண்டம் விட்டு கண்டம் பாயும் முதல் ஏவுகணையான டைட்டன் புளோரிடாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது(1959)

– தென்னகம்.காம் செய்தி குழு