Current Affairs – 6 December 2018
தமிழகம்
1.தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவல், 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தில்லியில் ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
இந்தியா
1. அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான ரயில்-சாலை பாலத்தை தேசிய நல்லாட்சி தினமான வரும் 25-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார்.
2. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) மிக அதிக எடைகொண்ட அதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-11 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
3.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 11-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
4.நாட்டில் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை நடப்பு நிதியாண்டில் இதுவரை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா கூறியுள்ளார்.
வர்த்தகம்
1.பருவநிலை மாற்றம் உலகம் முழுதும் மிகப்பெரும் அச்சுறுத் தலை உண்டாக்கியுள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள உலக வங்கி 2021-2025 ஆகிய ஐந்து ஆண்டுகளில் ரூ. 14 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
உலகம்
1.தென்னாப்பிரிக்க நாட்டின் தேசிய குற்ற விசாரணை அமைப்பின் முதல் பெண் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷமிலா படோஹி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு மாற்றாக இரு நாடுகளின் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான ஒப்பந்தம் உள்பட 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
2.பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸை சந்தித்துப் பேசினார்.
விளையாட்டு
1.உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
2.இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இன்று தொடங்குகிறது.
3.நடப்பு ஆண்டில் இந்தியாவில் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் வரிசையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இந்த ஆண்டு அவரது ஒட்டுமொத்த வருவாய் ரூ.228.09 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம்
- ஸ்பெயின் அரசியலமைப்பு தினம்
- பின்லாந்து விடுதலை தினம்(1917)
- இந்திய அரசியலமைப்பை இயற்றிய பி.ஆர்.அம்பேத்கார் இறந்த தினம்(1956)
- அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது(1865)
- உலகில் முதல் முறையாக லண்டனில் வாடகை வாகன சேவை துவங்கியது(1897)
- தென்னகம்.காம் செய்தி குழு