இந்தியா

1.மத்திய அரசின் ‘பீம்‘ செயலியை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் அதிர்ஷ்டசாலிகள் 5 பேருக்கு அவர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுக்கான கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என ரெயில்வே இலாகா தெரிவித்துள்ளது.
2.ஒடிசா மாநிலம் பலசோர் அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில், ‘ஆகாஷ்’ சூப்பர்சானிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.இந்த ஏவுகணை தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்க கூடியது.
3.காங்கிரஸ் தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒரே வேட்பாளரான ராகுல் காந்தி போட்டி இன்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


உலகம்

1.சியெரா லியோன் நாட்டுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய முட்டைவடிவ ‘அமைதி வைரம்’ அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 65 லட்சம் டாலர்களுக்கு ஏலம் போனது.பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல நகை தயாரிப்பாளர் லாரன்ஸ் கிராப் இந்த வைரத்தை ஏலம் எடுத்தார்.
2.ரோமானியா நாட்டு முன்னாள் மன்னரும் பிரிட்டன் நாட்டு அரசி எலிசபெத்தின் உறவினருமான மைக்கேல்(96) சுவிட்சர்லாந்து நாட்டில் காலமானார்.


இன்றைய தினம்

1.1865 -ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது.
2.1897 – வாடகை வாகனங்கள் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டன.

 

–தென்னகம்.காம் செய்தி குழு