Current Affairs – 6 August 2019
தமிழகம்
1.வேலூர் மக்களவைத் தேர்தல் அமைதியாக நடைபெற்ற நிலையில், இத்தொகுதியில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2.தமிழகத்தில் இதுவரை மாணவர்கள், முதுநிலை ஆசிரியர்கள் என 45.72 லட்சம் பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்தியா
1.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல்சாசன சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுகின்றன.
2.தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா ஆகியவற்றில் மாநிலங்களவையால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்களவையில் அவை நிறைவேற்றப்பட்டன.
3.சீட்டு நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதா 2019, மக்களவையில் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.
4.திருநங்கைகளுக்கு சமூக, பொருளாதார, கல்வி ரீதியாக அதிகாரமளிக்கும் வகையிலான திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா-2019 மக்களவையில் நிறைவேறியது.
5.உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கையை 30-லிருந்து, 33-ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது.
வர்த்தகம்
1.இந்தியன் வங்கி நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.365.37 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது
2.ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இயக்குநராக (துரப்பண பணி) இருந்த ஏ.கே.திவேதி கடந்த வாரம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய இயக்குநராக ராஜேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா பொறுப்பேற்றுக் கொண்டார்.
மற்றொரு நிறுவனமான ஐஓசியின் இயக்குநராக (நிதி) இருந்த ஏ.கே.சர்மா கடந்த மே மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து புதிய இயக்குநராக சந்தீப் குமார் குப்தா பொறுப்பேற்றுள்ளார்.
உலகம்
1.வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், 3 நாள் பயணமாக, வரும் 11-ஆம் தேதி சீனா செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு, இந்தியாவில் வரும் அக்டோபரில் நடைபெறவுள்ளது.
விளையாட்டு
1. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் தென்னாப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன்.
2.வாஷிங்டன் ஏடிபி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸ் பட்டம் வென்றார்.
இன்றைய தினம்
- ஹிரோஷிமா, டோரோ நாகாஷி நினைவு தினம்
- ஜமைக்கா விடுதலை தினம்(1962)
- பொலீவியா விடுதலை தினம்(1825)
- உலகளாவிய வலை (WWW)தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ் லீ வெளியிட்டார்(1991)
– தென்னகம்.காம் செய்தி குழு